தேசிய குடியுரிமைச் சட்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்!

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டும் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும் என தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசங்கர் மேனன் கூறியுள்ளதாவது, “தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டின் மீதான கவலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை உட்பட, தொடர்ச்சியாக தற்போது கொண்டு வரப்பட்ட இத்தகைய
 

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டும் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும் என தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசங்கர் மேனன் கூறியுள்ளதாவது, 

“தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டின் மீதான கவலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை உட்பட, தொடர்ச்சியாக தற்போது கொண்டு வரப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக, நாம் தனிமைப்படுத்தப்படுவோம்.

அதுமட்டுமின்றி, சர்வதேச ஊடகங்களை நாம் பார்த்தாலே தெரியும், இந்தியா மீதான உலக பொதுக்கருத்து தற்போது மாறிவிட்டது.  ‘அவர்கள் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்ளட்டும்’என வங்கதேச வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். நட்பு பாராட்டும் நண்பர்களே இதுபோல விரக்தி கருத்தை தெரிவித்துள்ளனர்.”

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனனின் எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

From around the web