“முதல்ல ராமர் கோவிலை கட்டுங்க” – அயோத்திக்குப் போகும் சிவசேனா உத்தவ் தாக்கரே !

மும்பை : ‘முதல்ல ராமர் கோவில் அப்புறம் சர்க்கார்’ என்ற புதிய முழக்கத்துடன் அயோத்தி நோக்கி பயணம் செல்கிறார் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே. பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதா கட்சியினரையும் ராமர் கோவில் கட்ட நினைவுப் படுத்துவதற்காக இந்த அயோத்திப் பயணம் என்றும் அவர் கூறியுள்ளார். உத்தவ் தாக்கரேவின் அயோத்திப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. நவம்பர் 25ம் தேதி அயோத்தியில் அவர் இருப்பார் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ரவுத்
 
மும்பை :  ‘முதல்ல ராமர் கோவில் அப்புறம் சர்க்கார்’ என்ற புதிய முழக்கத்துடன் அயோத்தி நோக்கி பயணம் செல்கிறார் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே. பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதா கட்சியினரையும் ராமர் கோவில் கட்ட நினைவுப் படுத்துவதற்காக இந்த அயோத்திப் பயணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
உத்தவ் தாக்கரேவின் அயோத்திப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. நவம்பர் 25ம் தேதி அயோத்தியில் அவர் இருப்பார் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
 
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை மூன்று பங்குகளாக பிரித்து ராம் லாலா, நிர்மோஹி அகாரா, சன்னி வக்ஃப் போர்டு க்கு அளித்து அலகாபாத் நீதிமன்றம் 
2010ல் தீர்ப்பளித்தது. அதன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விசாரணையை வரும் ஜனவரி  மாதத்திற்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
 
இந்நிலையில் ராமர் கோவிலை உடனடியாகக் கட்டியே ஆக வேண்டும் என்று சிவசேனா உத்தவ் தாக்கரேயும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கொடி பிடித்துள்ளனர். கோவிலை முதலில் கட்டுங்கள் பின்னர் அரசாங்கத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்பதன் மூலம், சர்ச்சையை கிளப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் உத்தவ் தாக்கரே.
 
மே மாதம் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்குள் ராமர் கோவில் பிரச்சனையை மீண்டும் கிளப்பி அரசியல் குளிர் காயும் பாஜக கூட்டணியின் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் உத்தவ் தாக்கரேவின் அயோத்திப் பயணம் இருப்பதாகத் தெரிகிறது.
 
– வணக்கம் இந்தியா

From around the web