கையில் காசை தங்க வைக்க எளிய நடைமுறைகள் ..

நம்மில் பலருக்கு எவ்வளவு தான் காசு சம்பாதித்தாலும் வந்த சுவடு தெரியாமல் போய்விடும் .பணம் சேமிப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும். இதற்கு நம் அலட்சிய மனோபாவம், அதிகம் செலவழிக்கிறோம் என்பதல்ல நாம் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களும் காரணமாக இருக்கலாம் என்று ஆன்மீக அன்பர்கள் கூறியுள்ளனர். வருகிற பணத்தை சேமித்து வைக்க சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றினாலே போதும். மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தர வாசம் புரிவாள் என்பது ஐதீகம். தினசரி வீட்டுப் பூஜையில் கடவுளுக்கு
 

கையில் காசை  தங்க வைக்க எளிய நடைமுறைகள் ..ம்மில் பலருக்கு எவ்வளவு தான் காசு சம்பாதித்தாலும் வந்த சுவடு தெரியாமல் போய்விடும் .பணம் சேமிப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும். இதற்கு நம் அலட்சிய மனோபாவம், அதிகம் செலவழிக்கிறோம் என்பதல்ல நாம் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களும் காரணமாக இருக்கலாம் என்று ஆன்மீக அன்பர்கள் கூறியுள்ளனர்.

வருகிற பணத்தை சேமித்து வைக்க சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றினாலே போதும். மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தர வாசம் புரிவாள் என்பது ஐதீகம். தினசரி வீட்டுப் பூஜையில் கடவுளுக்கு சாற்றப்படும் பூக்களை வாடிய உடன் அகற்றி விட வேண்டும்.

பூக்கள் வாடிய வீட்டை மகாலட்சுமி விரும்புவதில்லை. வீட்டில் அதிக பொருட்களை அடைத்து வைக்காமல் அடிக்கடி அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். தேவையற்ற பொருட்களை உபயோகப்படுபவர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.

பால், தயிர் , மோர் என பால் சம்பந்தப்பட்ட பொருட்களை எப்போதும் மூடி வைக்க வேண்டும். காலணிகள், சாக்ஸுகள் இவற்றை அணிந்து கொண்டு பூஜையறைக்குள் நுழையக் கூடாது. துடைப்பம், mop இவற்றை வீட்டிற்கு வெளியே வைத்தல் நலம். வீட்டிற்குள் காலணி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

முட்கள் உடைய செடி வகைகளை வீட்டிற்குள் வைத்து வளர்க்கக் கூடாது. இவ்வகையான செடிகள் வீட்டில் குழப்பத்தையும், வறுமையையும் ஏற்படுத்தும். துளசி போன்ற செடிகள் நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் உருவாக்கும்.

சிவப்பு சந்தனம், முந்திரி மற்றும் ஒரு சிறிய கல்லை எடுத்துக்கொண்டு அதனை ஒரு சிவப்பு துணியில் கட்டி வீட்டின் வடக்கு மூலையில் வைத்து செவ்வாய் கிழமைகளில் வழிபட்டு வர நேர்மறை சக்திகள் கைகூடி வீட்டில் தனவரவை நிலைக்கச் செய்யும். வீட்டின் மெயின் கதவுகள் உள்நோக்கி அதாவது நம் மேல் இடிக்காமல் திறக்கக் கூடியதாக இருத்தல் நலம் பயக்கும்.

http://www.A1TamilNews.com

From around the web