அரசு மருத்துவமனைகளில் தனிப்பாதை! தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு அறைகள், இருக்கைகள், கழிவறைகள் ஆகியவை அவ்வப்போது கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காகவும் கர்ப்பிணிகளுக்கும், தொற்று இல்லாதவர்களுக்கும் மருத்துவமனைக்குள் நுழைய தனிப்பாதைகள் அமைக்கப்பட
 

அரசு மருத்துவமனைகளில் தனிப்பாதை! தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு!மிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு  மருத்துவமனைகளில் காத்திருப்பு அறைகள், இருக்கைகள், கழிவறைகள் ஆகியவை அவ்வப்போது கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில்  கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காகவும் கர்ப்பிணிகளுக்கும், தொற்று இல்லாதவர்களுக்கும்  மருத்துவமனைக்குள் நுழைய தனிப்பாதைகள் அமைக்கப்பட  வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. தலைமைச் செயலாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web