10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

தமிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜூன் தொடங்கி விட்ட நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பெற்றோர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். ஜூன்15ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. இப்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் நடத்தி முடித்த
 

10ம் வகுப்பு தேர்வுகள்  முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!மிழகத்தில் பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஜூன் தொடங்கி விட்ட நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பெற்றோர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

ஜூன்15ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. இப்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் நடத்தி முடித்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

அடுத்து வரும் நாட்களின் சூழ்நிலையைப் பொறுத்தும், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பெற்றோர்களிடம் ஆலோசித்து பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்து முடிவெடுக்கப்படும்.

மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வரின் ஆலோசனைப்படி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும். இவை தவிர நடப்பு கல்வியாண்டில் வேலை நாட்களை குறைப்பது குறித்தும், பாடங்களை குறைப்பது குறித்தும் கல்வியாளர்கள், வல்லுனர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருவதாகவும் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web