சங்கம் மொழிந்த காதல்

‘சங்கம் மொழிந்த காதல்’ ஆதி மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வாழ்வினைப் பாடல்களாகத் தொகுத்து சங்க இலக்கியத்தில் படித்தறிய முடிகிறது. அந்த வாழ்வினை அகம், புறம் எனப் பிரித்துணரச் செய்யும் சிறந்த பணியினையும் அதற்குரிய இலக்கணத்தையும் எழுதிக் கொடுத்துள்ளனர். அகவாழ்வில் நிகழும் காதல் வாழ்வினைக் கூறும் 401 பாடல்களைக் குறுந்தொகை எனும் தலைப்பிட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது. அப்பாடல்களில் 30 பாடல்களை மட்டும் முடிந்த அளவில் எளிமைப்படுத்தி அளித்துள்ளேன். மேலும் பல பாடல்களை எழுதுவதற்கு முன்னர் குறுந்தொகை பற்றிய
 
   ‘சங்கம் மொழிந்த காதல்’   
சங்கம் மொழிந்த காதல்
ஆதி மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வாழ்வினைப் பாடல்களாகத் தொகுத்து சங்க இலக்கியத்தில் படித்தறிய முடிகிறது. அந்த வாழ்வினை அகம், புறம் எனப் பிரித்துணரச் செய்யும் சிறந்த பணியினையும் அதற்குரிய இலக்கணத்தையும் எழுதிக் கொடுத்துள்ளனர். அகவாழ்வில் நிகழும் காதல் வாழ்வினைக் கூறும் 401 பாடல்களைக் குறுந்தொகை எனும் தலைப்பிட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது. அப்பாடல்களில் 30 பாடல்களை மட்டும் முடிந்த அளவில் எளிமைப்படுத்தி அளித்துள்ளேன். மேலும் பல
பாடல்களை எழுதுவதற்கு முன்னர் குறுந்தொகை பற்றிய சில செய்திகளை இந்த வாரம் அறிவோம்.
 
அன்பு, தாய்மை, நட்பு,கொடை, வீரம் என அனைத்துக் குணங்களையும் காதலைப் பாடும் பாடல்களில் இணைத்துச் சொல்லித் தமிழனின் வாழ்வினை வாசகனின் கண்முன் நிறுத்தும் சிறப்புடையவை குறுந்தொகைப் பாடல்கள்.
 
சங்கப் பாடல்களை அமைக்கும் இலக்கணமுறை தவறாது, அதன் இயல்பும், இலக்கிய மரபும் மாறாது எழுதியுள்ளனர் புலவர்கள். காதலைச் சொல்லும் பாடல்களில் கூட இயற்கையையும், வாழும்பகுதியில் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், வாழ்வியல் முறைகளையும் சிறப்புறச் சொல்கிறது குறுந்தொகைப் பாடல்கள் அனைத்தும். பாடலில் சொல்லப்பட்டும் நிகழ்வை அல்லது செய்தியைச் சிறிதும் மாற்றமின்றிக் காட்சிப்படுத்தும் திறமையும், ஆற்றலும் வாய்ந்த புலவர்களால் எழுதப்பட்டதே
சங்கப்பாடல்களும், குறுந்தொகைப்பாடல்களும்.
 
குறுந்தொகையில் ஐவகை நிலங்கள் பற்றிய செய்திகளும், அந்நிலத்திற்கேற்ப மக்கள் வாழ்வு அமைந்துள்ளது பற்றியும்
சொல்லப்படுகின்றது.
 
குறிஞ்சி –மலையும் மலை சார்ந்த இடங்களும்
முல்லை – காடும் காடு சார்ந்த நிலங்களும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலங்களும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடங்களும்
பாலை – குறிஞ்சியும், முல்லையும் வெட்பம் தாங்காது இயல்பு மாறும் போது
ஏற்படும் மாற்றத்தைக் கொண்ட நிலம் பாலை என்பர்.
 
நிலங்களைப் போலவே, பொழுதுகளும் இடம்பெறுகின்றது
 
பெரும்பொழுதுகள்
 
கார்- ஆவணி, புரட்டாசி மாதங்கள் – முல்லை நிலத்திற்குரியது
கூதிர்- ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்
முன்பனி- மார்கழி, தை மாதங்கள்
பின்பனி-மாசி, பங்குனி மாதங்கள்
வேனில் பருவம் -இளவேனில், முதுவேனில் என இருவகைப்படும்
 
சிறுபொழுதுகள்
 
மாலை, யாமம், வைகறை, காற்று, சூறைக்காற்று, தென்றல்
கீழ்க்காற்று- கொண்டல், மேல்காற்று-கோடை
 
மேலும் மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள்,உணவுகள், கருவிகள், ஊர்திகள், வழக்கங்கள், நிமித்தங்கள், சாதிகள், அரசியல்,இசை, கடவுள், நீதிகள்,போன்றவை பற்றிய தகவல்களும் உள்ளது. குறுந்தொகைக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் இவற்றோடு மேலும் பல தகவல்களைத் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றைப் படிக்கும் போது தமிழனைப் பற்றிக் கற்றறிய ஏராளமான செய்திகள் உள்ளதை உணரலாம். அச்செய்திகளில் இருந்து சிறு துளி மட்டுமே இங்கு பகிரப்படுகிறது.
 
குறுந்தொகைப் பாடல்களைப் படித்தறிந்து எழுதுவதற்கு உதவிய நூல்களின் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழக நாட்களுக்குப் பிறகு சங்க இலக்கியத்தை மீண்டும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி, நிறைய எழுத ஆர்வப்படுத்திய வைதேகி அம்மாவிற்கு அன்பும், நன்றியும். கவிதைகளைக் காட்சிப்படுத்தி, ஒவ்வொரு வாரமும் ஓவியத்தின் வழியாகப் படிப்போரின் எண்ணத்தையும், உள்ளத்தையும் தன்வயப்படுத்திய சகோதரர் உதய் அவர்களுக்கு உள்ளத்து நன்றிகள் நாளும். இப்படியொரு தொடரெழுத வாய்ப்பளித்த வணக்கம்
இந்தியா இணையதளத்திற்கும், தொடர்ந்து எழுதிட ஊக்கப்படுத்திய ஆசிரியர் திரு. சங்கர் அவர்களுக்கு நன்றிகள் பல.
 
இறுதியாகச் சொன்னாலும், 30 வாரங்களாக எழுதச் செய்த பொறுப்பும், பெருமையும் வாசகர்களுக்கே சேரும். இத்தொடரைப் படித்தும், முகநூலில் பகிர்ந்தும் உதவிய அனைத்து வாசக உள்ளங்களுக்கும் அன்பு நிறைந்த நன்றிகள். இன்னுமொரு சங்க இலக்கியத் தொடரில் தொடர்வோம். மீண்டும் நன்றிகள்.
 
– சித்ரா மகேஷ்
 
ஒவியம்: உதய பாஸ்கர் 
 
முந்தைய வாரம்

From around the web