இந்த நாட்களில் வாங்கினால் விற்பனை வரி கிடையாது – அமெரிக்கத் தமிழர்கள் கவனத்திற்கு!

வாஷிங்டன்: இந்த வார இறுதியின் சனி, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் பல மாநிலங்களில் குறிப்பிட்ட பொருட்கள் வாங்கினால் விற்பனை வரி கிடையாது. அமெரிக்காவில் அலாஸ்கா, டெலவர், மோண்டானா, நியூஹாம்ஷயர், ஆரகன் மாநிலங்களில் ஆண்டு முழுவதும் விற்பனை வரி கிடையாது. பக்கத்து மாநிலங்களில் வசிப்பவர்கள் கூட வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.அதே போல் அலாஸ்கா, ஃப்ளோரிடா, நெவடா, தெற்கு டகோடா, டெக்சாஸ், வாஷிங்டன், வயாமிங் ஆகிய 7 மாநிலங்களில் மாநிலத்திற்குரிய வருமான வரி கிடையாது. டென்னசி, நியூஹாம்ஷயர் மாநிலங்களில் டிவிடண்ட்,
 

வாஷிங்டன்: இந்த வார இறுதியின் சனி, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் பல மாநிலங்களில் குறிப்பிட்ட பொருட்கள் வாங்கினால்  விற்பனை வரி கிடையாது.

அமெரிக்காவில் அலாஸ்கா, டெலவர், மோண்டானா, நியூஹாம்ஷயர், ஆரகன் மாநிலங்களில் ஆண்டு முழுவதும் விற்பனை வரி கிடையாது. பக்கத்து மாநிலங்களில் வசிப்பவர்கள் கூட வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.அதே போல் அலாஸ்கா, ஃப்ளோரிடா, நெவடா, தெற்கு டகோடா, டெக்சாஸ், வாஷிங்டன், வயாமிங் ஆகிய 7 மாநிலங்களில் மாநிலத்திற்குரிய வருமான வரி கிடையாது. டென்னசி, நியூஹாம்ஷயர் மாநிலங்களில் டிவிடண்ட், வட்டி வருமானத்திற்கு வரி உண்டு. தனிநபர் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. ஆனால் இந்த மாநிலங்களில் விற்பனை வரி அதிகம் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

விற்பனை வரி விதிக்கும் பெரும்பாலான மாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது விற்பனை வரி விலக்கு நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாட்களில் அனுமதிக்கப்படும் பொருட்களுக்கு மட்டும் விற்பனை வரி வசூலிக்கப்பட மாட்டாது.

சில்லரை வணிக நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு தள்ளுபடி அறிவிப்பதும் வழக்கம். சில மாநிலங்களில் 2019 ஆண்டுக்குரிய விற்பனை வரி விலக்கு நாட்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது.  ஆகஸ்ட் மாதம் கீழ்க்கண்ட மாநிலங்களில் விற்பனை வரி விலக்கு அமலில் உள்ளது. 

மாநிலம்          தேதி(ஆகஸ்ட்)

அர்கான்சா –   3, 4 
கனெக்டிகட் –  18 முதல் 25 வரை
ஃப்ளோரிடா – 2 முதல் 4 வரை
அயோவா –   2, 3
மேரிலாண்ட் –  11 முதல் 17 வரை
மசசூசட்ஸ் –  10 ,11
மிசோரி –    2 முதல் 4 வரை
நியூ மெக்சிகோ – 2 முதல் 4 வரை
ஒஹாயோ – 2 முதல் 4 வரை
ஒக்லஹோமா – 2 முதல் 4 வரை
தென் கரோலைனா – 2 முதல் 4 வரை
டெக்சாஸ் – 9 முதல் 11 வரை
வர்ஜீனியா – 2 முதல் 4 வரை

பொதுவாக ஆடைகள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கான பொருட்களுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. சில மாநிலங்களில்பொருட்களின் விலைக்கு அதிகபட்ச வரம்பும் நிர்ணயிக்கப்படுகிறது. லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கும் விற்பனை வரி சலுகை கிடைக்கிறது. 

அந்தந்த மாநிலங்களில் என்னென்ன பொருட்களுக்கு விற்பனை வரி விலக்கு என்று வணிக நிறுவனங்களும் விளம்பரங்களில் குறிப்பிடுகின்றனர். ஆகஸ்ட் மாதம் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மீண்டும் தொடங்க உள்ளதால், விற்பனை வரி விலக்கு வாரமும் வணிக நிறுவனங்களுக்கு முக்கிய நாட்களாக அமைகிறது.

– வண்க்கம் இந்தியா

From around the web