சபரிமலையில் 13 நாட்களில் ரூ.40 கோடி வருமானம்!

சபரிமலையில் நடை திறந்து 13 நாட்களில் அய்யப்பன் கோவிலுக்கு ரூ.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. மறுநாள் முதல் கோவிலில் நடை திறக்கப்பட்டு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்களின் வருகை கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது
 

சபரிமலையில் 13 நாட்களில் ரூ.40 கோடி வருமானம்!பரிமலையில் நடை திறந்து 13 நாட்களில் அய்யப்பன் கோவிலுக்கு ரூ.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. மறுநாள் முதல் கோவிலில் நடை திறக்கப்பட்டு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்களின் வருகை கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அய்யப்பன் கோவில் நடை திறந்ததில் இருந்து கடந்த 13 நாட்களில் கோவிலுக்கு வருமானமாக ரூ.40 கோடி கிடைத்துள்ளது. இதில் அரவணை உள்பட பிரசாத விற்பனை மற்றும் காணிக்கையும் அடங்கும். கடந்த ஆண்டு ரூ.19 கோடியே வருமானம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது,” என்று கூறினார்.

https://www.A1TamilNews.com

From around the web