கொரோனா வார்டில் நோயாளிகளைக் கவனிக்க ரோபோக்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார்10100 பேர் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பணிக்கு அச்சத்துடனேயே வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு
 

கொரோனா வார்டில் நோயாளிகளைக் கவனிக்க ரோபோக்கள்!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார்10100 பேர் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பணிக்கு அச்சத்துடனேயே வருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 4 ஷிப்ட்க்ள் வீதம் பணியாளர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா வார்டுக்கு 3 ரோபோக்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் ரோபோக்களைக் குறித்த டெமோ செய்து காட்டப்பட்டது.

இந்த ரோபாக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், மருந்தும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது.

A1TamilNews.com

From around the web