சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 50 பேரை அனுமதிக்க வேண்டும்!ஆர்.கே.செல்வமணி, குஷ்பு கோரிக்கை!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் தமிழகத்தைப் பொறுத்த வரை நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. சின்னத்திரை சார்பாக டைரக்டர், தயாரிப்பாளர் ஆர்.கே. செல்வமணி, நடிகை குஷ்பு,சுஜாதா விஜயகுமார், உள்பட பலர் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர்
 

சின்னத்திரை  படப்பிடிப்புகளுக்கு 50 பேரை அனுமதிக்க வேண்டும்!ஆர்.கே.செல்வமணி, குஷ்பு கோரிக்கை!கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் தமிழகத்தைப் பொறுத்த வரை நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

சின்னத்திரை சார்பாக டைரக்டர், தயாரிப்பாளர் ஆர்.கே. செல்வமணி, நடிகை குஷ்பு,சுஜாதா விஜயகுமார், உள்பட பலர் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சின்னத்திரை படப்பிடிப்பில் குறைந்தது 50 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும் அம்மா திரைப்பட படப்பிடிப்பு நிலையம் கட்டுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிதியில் இரண்டாவது தவணைத் தொகையான 50லட்சத்தை விரைந்து வழங்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பெப்சி துணைத்தலைவர் தினா, நடிகர் மனோபாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் லியாகத் அலிகான், சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகி வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு தொலைக்காட்சி தொடரில் கேமராமேன், இதர உதவியாளர்கள், கலைஞர்கள் என குறைந்தபட்சம் 60 பேர் வரை இருந்தால் தான் படப்பிடிப்புகளை தொடங்கமுடியும்.

இது தவிர நடிகர்,நடிகைகள். இதனால் குறைந்த பட்சம் 50 பேராவது படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அரசு அனுமதிக்கும் பட்சத்தில் சின்னத்திரையில் உள்ள மொத்தம் 24 யூனிட்டுகளும் பயனடையும் என தெரிவித்துள்ளனர்.

அரசு அனுமதி அளித்திருந்தாலும் இந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகப் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னத்திரை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web