அதிக விலைக்கு விற்றதால் அரிசி ஆலைக்கு சீல்!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பால், மளிகை, காய்கறி சந்தைகள், உணவகங்கள் இவைகள் திறக்கப்பட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மருந்தகங்கள் மட்டும் முழுநேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில வியாபாரிகள் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை இரு மடங்கு வரை விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் அளிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மேல்பாஷா பேட்டையில் மாவட்ட
 

அதிக விலைக்கு விற்றதால் அரிசி ஆலைக்கு சீல்!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

பால், மளிகை, காய்கறி சந்தைகள், உணவகங்கள் இவைகள் திறக்கப்பட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மருந்தகங்கள் மட்டும் முழுநேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில வியாபாரிகள் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை இரு மடங்கு வரை விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் அளிக்கப்பட்டன.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மேல்பாஷா பேட்டையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் தலைமையில் முருகன் அரிசி ஆலையில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. விசாரணையில், அரிசியை கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்த்தி விற்பனை செய்தது தெரிய வந்தது.

அரிசி ஆலையை உடனடியாகப் பூட்டி சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். வியாபாரிகள், மக்கள் நலன் கருதி உதவும் நோக்கத்தில் செயல்பட வேண்டும் என்று மீறுபவர்களின் கடைகள் மற்றும் ஆலைகள் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

A1TamilNews.com

From around the web