பாவம்தான் இந்த பணக்கார ஏழைகள்!

ஆதிக்க சக்திகளின் சாதித் திமிர் ஒழிய வேண்டும்… அதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார, சமூக அந்தஸ்து உயர வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீட்டு முறையே கொண்டுவரப்பட்டது. இப்போது ஆதிக்க சக்திகளுக்கும் இடஒதுக்கீட்டை அறிவித்து சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை அப்படியே பாதுகாக்கும் வேலையில் மும்முரம் காட்டுகிறது இந்த பாஜக அரசு. பட்டியல் பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ரூ 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை இருந்தால் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பில் கட்டண
 

 

பாவம்தான் இந்த பணக்கார ஏழைகள்!திக்க சக்திகளின் சாதித் திமிர் ஒழிய வேண்டும்… அதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார, சமூக அந்தஸ்து உயர வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீட்டு முறையே கொண்டுவரப்பட்டது. இப்போது ஆதிக்க சக்திகளுக்கும் இடஒதுக்கீட்டை அறிவித்து சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை அப்படியே பாதுகாக்கும் வேலையில் மும்முரம் காட்டுகிறது இந்த பாஜக அரசு.

பட்டியல் பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ரூ 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை இருந்தால் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பில் கட்டண சலுகை தரப்படுகிறது. ஆனால் பாவம்… ‘பொதுப்பிரிவு ஏழை’களுக்கு ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் இருந்தாலே கல்வி, வேலைவாய்ப்பில் சலுகை என்று அறிவித்து, அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது மோடியின் அமைச்சரவை.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது… இந்த முறை தேர்தலில் மோடியின் பிம்பம் எடுபடாது என்பதால் இந்த மோடி மஸ்தான் வேலையில் இறங்கியுள்ளார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. உண்மையிலேயே பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் என்றால் அவர்களுக்கு சலுகைகள் வழங்க பரிசீலிக்கலாம். ஆனால் ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் மற்றும் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்குப் பெயர் ஏழையா? இது எந்த மாதிரி வரையறை? சாதி இந்துக்கள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் உயர் சாதியினர் பெரும்பாலானோர்க்கு சாதகமான வரையறை இது. இட ஒதுக்கீடு பெறும் பிற மக்களைப் பார்த்துப் பொருமிக் கொண்டிருந்தவர்கள் இந்த ‘வசதியான ஏழைகள்’. இவர்களைத் திருப்திப்படுத்தினால் போதும், நிரந்தர பிரதமர் நாம்தான் என்ற மோடியின் எண்ணம்தான் இந்த அறிவிப்புக்கு காரணம்.

பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டிலா கை வைத்துவிட்டார்கள்? பொதுப்பிரிவிலிருந்து 10 சதவீதம்தானே… கொடுத்துவிட்டுப் போகட்டும் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அதற்கான வரையறை மிகத் தவறானது. சாதித் திமிர் பிடித்தவர்களை ஊக்குவிக்கும் வகையில்தான் அது அமைந்துள்ளது. இட ஒதுக்கீட்டின் பலன், அதற்குரியவர்களுக்குத்தான் சேர வேண்டும்.

கொடும் பசியில் தவியாய்த் தவிப்பவனுக்குத்தான் உணவின் அருமை புரியும்… மூக்குமுட்டத் தின்றுவிட்டு புளிஏப்பம் விடுபவனிடம் தட்டு நிறைய உணவு வைப்பது எப்படியோ… அப்படித்தான் இந்த பணக்கார ஏழைகளுக்கான இட ஒதுக்கீடும்!

– முதன்மை ஆசிரியர்
வணக்கம் இந்தியா

From around the web