அடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே?

சென்னை : தமிழக செய்தி சேனல்களில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்ட ரங்கராஜ் பாண்டே ஜீ குழுமத்தில் சேரப்போகிறாரா என்று கேள்விகள் பலமாக எழுந்துள்ளது. தினமலரில் பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே அடுத்ததாக தந்தி டிவியில் சேர்ந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஆனார். அவர் விலகப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் உலவியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கடந்தவாரம் சட்டென்று தந்தி டிவியை விட்டு விலகினார் பாண்டே. எங்கும் போகவில்லை. ரிஸ்க் எடுத்துள்ளேன். உங்கள் உறவை ஒரு
 

அடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே?அடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே?சென்னை : தமிழக செய்தி சேனல்களில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்ட ரங்கராஜ் பாண்டே ஜீ குழுமத்தில் சேரப்போகிறாரா என்று கேள்விகள் பலமாக எழுந்துள்ளது. தினமலரில் பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே அடுத்ததாக தந்தி டிவியில் சேர்ந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஆனார். அவர் விலகப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் உலவியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

கடந்தவாரம் சட்டென்று தந்தி டிவியை விட்டு விலகினார் பாண்டே. எங்கும் போகவில்லை. ரிஸ்க் எடுத்துள்ளேன். உங்கள் உறவை ஒரு நாளும் விட்டு விடமாட்டேன் என்று செல்ஃபி வீடியோவும் விட்டார்.

தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தாலும் வடக்கத்தி பெயரை கூடவே வைத்திருக்கும் அவர், வடநாட்டு சேனலான ஜீ குழுமத்தின் தமிழ்நாட்டு பொறுப்பேற்கக்கூடும் என்று என்று தெரிகிறது. முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தில் தஞ்சமடைகிறார் என்ற தகவலை வதந்தி என்று ரஜினிகாந்தே சொல்லி விட்டார்.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் தமிழ்ப் படத்தில் ஜீ டிவி குழுமத்திற்கும் பங்கிருப்பதாக கூறியிருந்தார். அஜீத் குமார் நடிக்கும் இந்தப்படம் , இந்தியில் சக்கைபோடு போட்ட பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். அஜீத் படப்பூஜையில் கொள்ளவில்லை. ஆனால், இது வரை எந்த படவிழாக்களுக்கும் போகாத ரங்கராஜ் பாண்டே போயிருக்கிறார்.

போனிகபூருடன் ஜீ குழுமமும் கை கோர்க்கும் என்று அவர் கூறிய நிலையில், ரங்கராஜ் பாண்டே, ஜீ டிவி குழுமம் சார்பில் கலந்து கொண்டதாகவே தெரிகிறது.

தந்தி டிவி நிர்வாகத்திற்கும் தனக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. நீங்களே ஒரு ப்ராண்ட் ஆகி விட்டீர்கள் என்று எம்.டி பாராட்டினார் என்று சில நாட்கள் முன்புதான் வீடியோ மூலம் சொல்லியிருந்தார்.

அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே ஜீ டிவி குழுமம் தயாரிக்கும் படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். தொழில் ரீதியாக நிறுவனம் மாறுவது ஒன்றும் புதிதில்லையே. ஏன் அப்படி ஒரு பூடகமான வீடியோ வெளியிட்டார் என்பது பெரும் கேள்வியாகி உள்ளது.

தமிழகத்தில் சன் டிவிக்கு போட்டியாக ஜீ டிவியை வளர்த்தெடுக்கவே ரங்கராஜ் பாண்டேவை வளைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. என்ன இருந்தாலும் வடக்கத்தி பாசம் இருக்கும் போலிருக்கு!

– வணக்கம் இந்தியா

From around the web