தேர்தல் வியூகம்: ரஜினி ரசிகர்களுக்கு பாடம் எடுத்த ரங்கராஜ் பாண்டே!

தேர்தலை சந்திப்பது எப்படி என்பது குறித்தான விளக்கத்தை ரஜினி ரசிகர்களுக்கு ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் பங்கேற்ற ரங்கராஜ் பாண்டே, ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், தேர்தலில் வெற்றி பெற ரசிகர்களின் பங்கேற்பு பற்றியும் விரிவாகப் பேசினார். “ரஜினிக்கு இருப்பது ஒரே சான்ஸ் தான். வந்தால் ஜெயிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆலோசனைகள் நடத்தி வருகிறார். ராஜா மாதிரி இருந்து வருகிறார்.
 

தேர்தல் வியூகம்: ரஜினி ரசிகர்களுக்கு பாடம் எடுத்த ரங்கராஜ் பாண்டே!தேர்தலை சந்திப்பது எப்படி என்பது குறித்தான விளக்கத்தை ரஜினி ரசிகர்களுக்கு ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.

வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் பங்கேற்ற ரங்கராஜ் பாண்டே, ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், தேர்தலில் வெற்றி பெற ரசிகர்களின் பங்கேற்பு பற்றியும் விரிவாகப் பேசினார்.

“ரஜினிக்கு இருப்பது ஒரே சான்ஸ் தான். வந்தால் ஜெயிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆலோசனைகள் நடத்தி வருகிறார். ராஜா மாதிரி இருந்து வருகிறார். கலைஞர், ஜெயலலிதா இருவருக்கும் மிகவும் நெருக்கமாக இருந்தவர். பிரதமரே வீடு தேடி வந்து பார்க்கும் அளவுக்கு செல்வாக்கு கொண்டவர். வீடு, மனைவி, குடும்பம், நட்பு, நிம்மதி என அனைத்தையும் விட்டு விட்டு அரசியலுக்கு வந்தால் என்னென்ன இழப்பு என்று அளவிட முடியாது. ஆனாலும் தமிழக மக்களுக்கு நல்லதைச் செய்தாகவேண்டும் என்ற நினைப்பிலே தான் இந்த முடிவை எடுக்கிறார்.

எதிரணியில் ஸ்டாலினுக்கு ஆதரவு இருக்கிறது. அதிமுக என்றால் எடப்பாடி தான் என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.இந்த சூழலில் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார் ரஜினி. 234 தொகுதிகளிலும் ரஜினியே நிற்கிறார் என்று நினைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டும். ஒரு தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும். திமுக, அதிமுக என அனைத்து கட்சியினரையும், எந்தக் கட்சியிலும் இல்லாதவர்களையும் சேர்க்க வேண்டும்.

தேர்தல் பணி என்பது ரசிகர் மன்றப் பணி போன்றது அல்ல. மதிநுட்பமான வேலை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளரகளை வாக்குச்சாவடிக்கு வரவைத்து நமக்கு வாக்களிக்க வேண்டிய வேலை. மைக்ரோ எஞ்சினியரிங், சோசியல் எஞ்சினிரியங். மிகப் பெரிய வேலை. திரையில் போல் இல்லை. ஒவ்வொரு வார்டு வார்டாக வாக்காளர்களை அழைத்து வந்து வாக்களிக்கச் செய்ய வேண்டிய வேலை. கருத்து வேறுபாடுகளை மறந்து உங்கள் தலைவருக்காக உழைக்க வேண்டும்.

அதிசயமும் அற்புதமும் மேலே இருந்து வருவது இல்லை. கீழே நீங்கள் வேர்களாக இருந்து உழைத்தால் தான் சாத்தியமாகும்,” என்று ரஜினி ரசிகர்களுக்கு தேர்தல் குறித்தான பாடம் எடுத்துள்ளார் ரங்கராஜ் பாண்டே.

https://www.A1TamilNews.com

From around the web