ரஜினியின் பலம் என்ன… அரசியலில் அது கை கொடுக்குமா?

கடந்த 38 ஆண்டுகளாக நான் ரஜினியை கவனிக்கிறேன். அவரிடம் ஒரு அடிப்படை குணம் உண்டு. அவர் தோல்வியை எளிதாக எடுத்துக் கொள்பவர் அல்ல . அதாவது தோல்வியடைந்தால் துவண்டுவிடுவது கிடையாது. அதே சமயம் ஒரு தோல்வி வந்தால், அது பற்றி ஆராய்ந்து காரணங்களை கண்டறிவார். தன் முழு கவனத்தையும் செலுத்தி அடுத்து ஒரு மிகப்பெரும் வெற்றியை கொடுத்து முந்தய தோல்வியின் சுவடே தெரியாமல் செய்துவிடுவார். பாபாவுக்கு பின் வந்த சந்திரமுகியும், லிங்காவுக்கு பின் வந்த கபாலியும் இதை
 

ரஜினியின் பலம் என்ன… அரசியலில் அது கை கொடுக்குமா?

ரஜினியின் பலம் என்ன… அரசியலில் அது கை கொடுக்குமா?டந்த 38 ஆண்டுகளாக நான் ரஜினியை கவனிக்கிறேன். அவரிடம் ஒரு அடிப்படை குணம் உண்டு. அவர் தோல்வியை எளிதாக எடுத்துக் கொள்பவர் அல்ல . அதாவது தோல்வியடைந்தால் துவண்டுவிடுவது கிடையாது. அதே சமயம் ஒரு தோல்வி வந்தால், அது பற்றி ஆராய்ந்து காரணங்களை கண்டறிவார். தன் முழு கவனத்தையும் செலுத்தி அடுத்து ஒரு மிகப்பெரும் வெற்றியை கொடுத்து முந்தய தோல்வியின் சுவடே தெரியாமல் செய்துவிடுவார்.

பாபாவுக்கு பின் வந்த சந்திரமுகியும், லிங்காவுக்கு பின் வந்த கபாலியும் இதை நிரூபித்தன. ‘நான் யானை அல்ல குதிரை’ என்று உரக்கச் சொன்னவராயிற்றே!. யானை விழுந்தால் எழுந்திரிக்க நேரம் ஆகும். ஆனால், குதிரை விழுந்த வேகத்தில் எழுந்திரிக்கும் அல்லவா!.1996ல் உறுதியாக வெற்றி என இருந்தபோதே அரசியலுக்கு வராமல் இருந்த ரஜினி இப்போது வருகிறார் என்றால் என்ன அர்த்தம்? தோல்வியடையவா? நிச்சயமாக அப்படி இருக்காது!

ஜெயலலிதா, கருணாநிதி, இவர்கள் இருவரும் தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தால் ஆள்பவரை நல்லது செய்ய விடவே மாட்டார்கள். தொடர்ந்து தொந்தரவுகள் இருக்கும். முழுக்க முழுக்க அரசியல் செய்தால் மட்டுமே இவர்களை சமாளிக்கமுடியும். ரஜினி மக்களை கவனிப்பாரா இல்லை இவர்களை சமாளிப்பதில் கவனம் செலுத்துவாரா? சராசரி அரசியல் செய்வதற்கு ரஜினி வந்து மக்களுக்கு என்ன பயன்? ஜெயிக்கவைக்க மட்டுமே மக்களால் முடியும்.

ஆனால் அரசாங்கம் செயல்படவிடாமல் தடுக்க பெரும் ஆளுமை உள்ள இந்த இருவரால் முடியும். இன்று இருவரும் இல்லை. இப்போது அவர் நினைத்ததை செய்யும் நேரம் வந்துள்ளது. அதாவது ரஜினி எதிர்பார்த்த சூழ்நிலை இப்போதுதான் வந்திருக்கிறது. மு.க.ஸ்டாலின் இருக்கிறாரே என்று கேட்கலாம். ஆனால் ஜெயலலிதா அளவுக்கு அசாத்திய தைரியமோ, வசீகரிக்கும் பிம்பமோ அல்லது கருணாநிதி அளவுக்கு சாணக்கியத்தனமோ, சாதுரியமோ ஸ்டாலினிடம் இல்லவே இல்லை. அவர்கள் இருவரை போன்ற பெரும் ஆளுமையும் இல்லை.

ரஜினிக்கு இது 1996ஐ விட மிகச்சரியான நேரம். ஒரே ஒரு வித்தியாசம். 1996ல் ஆட்சியை எளிதாக பிடித்திருப்பார். ஆனால் நல்ல ஆட்சியை கொடுத்திருக்க முடியாது. இன்று ஆட்சியை பிடிக்க அவர் மிக நுணுக்கமாக வியூகங்கள் வகுக்கவேண்டிவரும். வெற்றி பெற்றால் இந்தியா இதுவரை கண்டிராத ஆட்சியை தருவார். இது நன்றாக தெரிந்ததால்தான் இப்போது வருகிறார்.

அரசியலில் வெற்றியை தீர்மானிப்பது ‘சரியான நேரத்தில் சரியான முடிவு’ தான். இப்போது அரசியலில் இறங்க அவர் முடிவெடுத்திருப்பது ‘சரியான முடிவு’ .ஆனால் ‘சரியான நேரம்’ இன்னும் அமையவில்லை என்பதுதான் உண்மை.

ரஜினிக்கு தன் பலம் என்னவென்று நன்றாக தெரியும். எதையுமே அடக்கி வாசித்து பழக்கப்பட்டவர் ரஜினி. தன் பலத்தையும் இன்று அப்படித்தான் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது லேட்டஸ்டாக சொல்ல வேண்டுமென்றால், இதை ‘ஸ்கீரின்ஷாட்’ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு அடுத்தடுத்து நடக்கப்போகும் நிகழ்வுகள் தமிழக அரசியலை தலைகீழாக புரட்டிப்போடப் போகிறது. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுமக்கள் என யாருமே இதுவரை பார்த்திராத அளவுக்கு ரஜினிகாந்தின் வீச்சு இருக்கும். அவர் ஏற்கனவே சொன்னதுபோல் ‘மாஸ் சைக்காலஜியை’ஐ நன்றாக தெரிந்து வைத்துள்ளார். அதை எப்படி கையாள்வது என்பதும் ரஜினிக்கு நன்றாகத் தெரியும்.

– மனோகரன்

A1TamilNews.com

 

From around the web