ஏழு வயதுச் சிறுவனின் நேர்மைக்கு ரஜினி தந்த ‘விலைமதிப்பில்லா’ பரிசு!

ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர்குளத்தைச் சேர்ந்த, இரண்டாம் வகுப்பு மாணவன் யாசின். பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன். இவன், பள்ளி செல்லும் போது, கீழே கிடந்த பையில், 50 ஆயிரம் ரூபாய் இருந்ததைக் கண்டான். அதை, தன் ஆசிரியர் உதவியுடன், போலீசில் ஒப்படைத்தான். சிறுவனை அழைத்து, போலீசார் பாராட்டினர். வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்தாருக்கு, ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவி செய்ய முன் வந்தனர். அதை ஏற்க மறுத்த யாசின், ‘ரஜினியை சந்திப்பதுதான் தன்
 


ரோடு மாவட்டம், கனிராவுத்தர்குளத்தைச் சேர்ந்த, இரண்டாம் வகுப்பு மாணவன் யாசின். பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன். இவன், பள்ளி செல்லும் போது, கீழே கிடந்த பையில், 50 ஆயிரம் ரூபாய் இருந்ததைக் கண்டான். அதை, தன் ஆசிரியர் உதவியுடன், போலீசில் ஒப்படைத்தான். சிறுவனை அழைத்து, போலீசார் பாராட்டினர்.

வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்தாருக்கு, ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவி செய்ய முன் வந்தனர். அதை ஏற்க மறுத்த யாசின், ‘ரஜினியை சந்திப்பதுதான் தன் ஆசை’ என்று தெரிவித்தான். இதையடுத்து, சிறுவனையும், அவனது குடும்பத்தினரையும் ரஜினி, நேற்று தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். சிறுவன் யாசினுக்கு, தங்கச்செயினை பரிசாக அளித்தார்.

பின், ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பணத்துக்காகக் கொலை, கொள்ளை எனப் பல விசயங்கள் நடக்கும் இந்தக் காலத்தில், யாசின் தனக்கு கிடைத்த பணத்தை தன்னுடையது இல்லை எனத் திருப்பித் தந்துள்ளான். இந்தக் குணம், இந்த மனம் இதை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இவனைப் பெற்றவர்கள், இவ்வளவு பண்பானவனாக வளர்த்தவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

தற்போது சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். அவன் அங்கேயே படிக்கட்டும் என நான் பெற்றோர்களிடம் கூறியுள்ளேன். யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன். இவர்களைப் போன்ற குழந்தைகள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான இன்று யாசினை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி,” என்றார்.

ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை ஆரம்பிக்கும் முன் ரசிகர்கள் மத்தியில் பேசியபோது, “பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் என்னுடன் பயணிப்பவர்கள் யாராக இருந்தாலும் இப்போதே ஓடிப் போய் விடுங்கள்… நேர்மை, நியாயமாக உழைப்பவர்களுக்கு மட்டுமே என் இயக்கத்தில் இடம் உண்டு,” என்று கூறியிருந்தார்.

இப்போது நேர்மையாக செயல்பட்ட தனது 7 வயது ரசிகனை நேரில் அழைத்து தங்கச் சங்கிலி பரிசளித்ததோடு, அவனது மொத்த எதிர்காலத்துக்குமே பொறுப்பேற்றுள்ளார். அதுவும் அந்த சிறுவனை தன் சொந்த பிள்ளையாக பாவிப்பதாக அவர் கூறியது நேர்மைக்குக் கிடைத்த விலை மதிப்பில்லா பரிசாகவே பார்க்கப்படுகிறது.

 

From around the web