எப்படி இருக்கு ரஜினியின் ‘காலா’ பாடல்கள்?

சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகவிருக்கும் காலா படத்தின் பாடல்கள் இன்று காலை இணையத்தில் வெளியாகின. முதன்முறையாக அனைத்து பாடல்களும் தொலைகாட்சி மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இதுவரை வேறு எந்த நடிகரின் படத்துக்கும் இப்படி நடந்த்தில்லை. காலா படத்தின் பாடல்கள் வழக்கமான ரஜினி படப் பாடல்கள் போல இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறோம். “செம வெய்ட்டு….” பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்திற்கு
 
எப்படி இருக்கு ரஜினியின் ‘காலா’ பாடல்கள்?சூப்பர்ஸ்டார்  நடிப்பில் வெளியாகவிருக்கும் காலா படத்தின் பாடல்கள் இன்று காலை இணையத்தில் வெளியாகின. முதன்முறையாக அனைத்து பாடல்களும் தொலைகாட்சி மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இதுவரை வேறு எந்த நடிகரின் படத்துக்கும் இப்படி நடந்த்தில்லை. 
 
காலா படத்தின் பாடல்கள் வழக்கமான ரஜினி படப் பாடல்கள் போல இல்லை என்பதை முதலிலேயே  சொல்லிவிடுகிறோம்.
 
“செம வெய்ட்டு….” பாடல்  ஏற்கனவே இணையத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
 
சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்திற்கு மொத்தம் 9 பாடல்கள். ரொம்ப நாளைக்குப் பிறகு அதிக ட்ராக்குகள் கொண்ட ஆல்பம். 
 
அருண்ராஜா காமராஜ், லோகன், கபிலன், உமாதேவி ஆகியோர் இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார்கள்.
 
செம்ம வெய்ட்டு…, தங்க சேல…,கற்றவை பற்றவை…, கண்ணம்மா…., கண்ணம்மா அகப்பேல்ல, உரிமையை மீட்போம்…, போராடுவோம்…., தெருவிளக்கு…, நிக்கல் நிக்கல் ….. என 9 பாடல்கள்
கண்ணம்மா… பாடல் மாய நதியை.. நினைவில் கொண்டு வந்தாலும் திரும்ப திரும்ப கேட்கும் போது மனதில் நிற்கிறது.
 
உரிமையை மீட்போம்… மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பாடல். 
 
கற்றவை பற்றவை, தங்க சேல… பாடல்கள் ஆட்டம் போட வைக்கும் ரகம்.
 
நான்கு பாடல்கள் ராப் பாணியிலேயே அமைந்திருக்கிறது. இதை ரஜினி ரசிகர்களைத் தாண்டி பொது ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பது இனிமேல்தான் தெரியும்.
மொத்தத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ‘காலா’ பாடல்கள் செம வெய்ட்டு.
 
– வணக்கம் இந்தியா
 
https://youtu.be/yf327kvltwI

From around the web