24 மணி நேரத்தில் 2.0 செய்த சாதனை என்ன தெரியுமா? #Rajinikanth #2Point0Teaser

வெளியான 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 32.65 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் முதல் டீசர். அதிகபட்சமாக இந்தியில் 10.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றது இந்த டீசர். 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. பகல் 11 மணி நிலவரப்படி 11.19 மில்லியன் பார்வைகளை இந்தியில் பெற்றுள்ளது. தமிழில் 24 மணி நேரத்தில் 9.4 மி்ல்லியன் பார்வைகளைப் பெற்றது இந்த டீசர். தெலுங்கில்
 

24 மணி நேரத்தில் 2.0 செய்த சாதனை என்ன தெரியுமா? #Rajinikanth #2Point0Teaser

வெளியான 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 32.65 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் முதல் டீசர்.

அதிகபட்சமாக இந்தியில் 10.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றது இந்த டீசர். 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. பகல் 11 மணி நிலவரப்படி 11.19 மில்லியன் பார்வைகளை இந்தியில் பெற்றுள்ளது.

தமிழில் 24 மணி நேரத்தில் 9.4 மி்ல்லியன் பார்வைகளைப் பெற்றது இந்த டீசர். தெலுங்கில் 5.1 மில்லியன் பார்வைகள் கிடைத்தன.

ரூ 542 கோடியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி உள்ளது. இந்தியாவின் முதல் அதிக பட்ஜெட் பிரமாண்டப் படம் எனும் பெருமைக்குரிய 2.0-வின் முதல் டீசர் நேற்று காலை 9 மணிக்கு வெளியானது.

தியேட்டர்களில் 3டியில் இலவசமாக ரசிகர்களுக்குக் காட்டப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் டீசரைப் பார்க்க 6000 -க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் காலையிலேயே குவிந்துவிட்டனர்.

அதே நேரத்தில் ஆன்லைனிலும் இந்தப் படம் வெளியானது. வெளியான சில நிமிடங்களில் அதிகப் பயனாளர்கள் காரணமாக யுட்யூப் சேனலே முடங்கிப் போனது. பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகுதான் இயல்பு நிலை திரும்பியது.

டீசர் வெளியான 24 மணி நேரத்துக்குள் தமிழில் 9.3 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது 2.0 டீசர். தமிழ் திரையுலக வரலாற்றில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்றது ரஜினியின் காலாதான். 12 மில்லியன் பார்வைகள் அந்தப் படத்துக்குக் கிடைத்தன. அதற்கடுத்த இடத்தில் விஜய்யி்ன் மெர்சல் உள்ளது. 2.0-வுக்கு மூன்றாவது இடம்தான். இதற்கு முக்கிய காரணம் தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் 6500 திரையரங்குகளில் இந்த டீசர் நேரடியாகத் திரையிடப்பட்டதுதான் என்கிறார்கள் ரசிகர்கள்.

யுட்யூப் மட்டுமல்லாது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து வகை டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 2.0-வுக்குக் கிடைத்துள்ள மொத்த பார்வைகள் 32.65 மில்லியன். இந்திய சினிமா வரலாற்றில் பாகுபலிக்குப் பிறகு இந்த சாதனையை 2.0தான் செய்துள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web