‘ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்!’- ரஜினிகாந்த்

சென்னை: இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்: நதிகளை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நான் வெகுநாட்களாக கூறி வருகிறேன். மறைந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவு இது. இது தொடர்பாக அவரை நான் ஒரு முறை சந்தித்தபோது, இந்தத் திட்டத்துக்கு பகீரத் யோஜனா என்று பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். பகீரத் யோஜனா என்றால் சாத்தியமாகாத
 

சென்னை:  இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:

நதிகளை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நான் வெகுநாட்களாக கூறி வருகிறேன். மறைந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவு இது. இது தொடர்பாக அவரை நான் ஒரு முறை சந்தித்தபோது, இந்தத் திட்டத்துக்கு பகீரத் யோஜனா என்று பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.  பகீரத் யோஜனா என்றால் சாத்தியமாகாத ஒன்றை சாத்தியமாக்கிக் காட்டுவது. சிரித்தபடி அதனைக் கேட்டுக் கொண்டார் வாஜ்பாய். அந்த வகையில், தற்போது, நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

மக்கள் ஆதரவுடன் – அவர்கள் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை – ஒருவேளை மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நதிகள் இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நதிகளை இணைத்தால் நாட்டில் இருந்து வறுமை போய்விடும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

தப்பா எடுத்துக்காதீங்க, இது தேர்தல் நேரம். என்ன பேசினாலும் தப்பா போயிடும்… அப்புறம் பார்க்கலாம்,” என்றார்.

முன்னதாக, தர்பார் படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அதற்கு அனைவருக்கும் நன்றி என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

 

From around the web