கே.பாலச்சந்தர் 90 வது பிறந்த நாள் விழா! ரஜினிகாந்த் வாழ்த்து!!

தமிழ்த் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான கே.பாலச்சந்தரின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார் ரஜினிகாந்த். ”கன்னடத்தில் அறிமுகமாகி சாதாரண நடிகனாகவே வாழ்க்கை முடிந்து இருக்கும். கே.பாலசந்தர் பெயரை மாற்றி, 4 படங்களில் நல்ல வேடங்களில் அறிமுகப்படுத்தி என்னை நட்சத்திரமாகத் தான் தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். என்னுடைய பெற்றோர், அண்ணனுக்குப் பிறகு பாலச்சந்தர் சார் தான் என்னுடைய நான்கு தெய்வங்கள். என்னுடைய அனைத்து வளர்ச்சிக்கும் பாலச்சந்தர் சார் தான் காரணம். என்னைப் போல்
 

கே.பாலச்சந்தர் 90 வது பிறந்த நாள் விழா! ரஜினிகாந்த் வாழ்த்து!!தமிழ்த் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான கே.பாலச்சந்தரின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார் ரஜினிகாந்த்.

”கன்னடத்தில் அறிமுகமாகி சாதாரண நடிகனாகவே வாழ்க்கை முடிந்து இருக்கும். கே.பாலசந்தர் பெயரை மாற்றி, 4 படங்களில் நல்ல வேடங்களில் அறிமுகப்படுத்தி என்னை நட்சத்திரமாகத் தான் தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். என்னுடைய பெற்றோர், அண்ணனுக்குப் பிறகு பாலச்சந்தர் சார் தான் என்னுடைய நான்கு தெய்வங்கள்.

என்னுடைய அனைத்து வளர்ச்சிக்கும் பாலச்சந்தர் சார் தான் காரணம். என்னைப் போல் இன்னும் எத்தனையோ நடிகர்களுக்கு, இயக்குனர்களுக்கு அவர் வாழ்வு கொடுத்துள்ளார்.

 ரமேஷ் சிப்பி, சுபாஷ் கை, ஏ.பீம்சிங், கிருஷ்ணன் – பஞ்சு, மணிரத்னம், ஷங்கர் என எத்தனையோ இயக்குனர்களிடம் நடித்துள்ளேன். அவர்களிடம் இல்லாததை, படப்பிடிப்பு தளத்தில் கம்பீரமான இயக்குனர் பாலச்சந்தரிடம் பார்த்துள்ளேன்.

இன்னும் நீண்ட நாட்கள் பாலச்சந்தர் சார் இருந்திருக்க வேண்டும். அவருடைய 90 வது பிறந்தநாளில் நினைவு கூர்ந்து  ஆசியை வேண்டி, அவருடைய ஆன்மா நிம்மதியாக இருக்க வேண்டுகிறேன்,” என்று  வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

A1TamilNews.com

 

From around the web