களையெடுப்பு ஆரம்பம்!! தேர்தலுக்காக சுறுசுறுப்புடன் தயாராகும் ரஜினி மக்கள் மன்றம்?

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மார்ச் மாதம் தொடக்கத்தில் பத்திரிக்கையாளர்களிடம் ரஜினிகாந்த் பேட்டியளித்ததை அடுத்து, ரசிகர்கள் உற்சகமாக ரஜினியின் முழு பேச்சையும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். எழுச்சி அரசியல் மிகவும் முக்கியமான சொற்றொடராக பேசு பொருள் ஆனது. ஆனால் அடுத்த ஒரிரு வாரங்களுக்குள் கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியதால் ரஜினி மக்கள் மன்றத்தினர், சுறுசுறுப்புடன் நிவாரணப் பணிகளில் இறங்கி விட்டனர். பேரிடர் காலங்களில், தங்கள் தலைவரின் கட்டளைக்கும் காத்திராமல், உடனடியாக களம் இறங்கும்
 

களையெடுப்பு ஆரம்பம்!! தேர்தலுக்காக சுறுசுறுப்புடன் தயாராகும் ரஜினி மக்கள் மன்றம்?சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மார்ச் மாதம் தொடக்கத்தில் பத்திரிக்கையாளர்களிடம்  ரஜினிகாந்த் பேட்டியளித்ததை அடுத்து, ரசிகர்கள் உற்சகமாக ரஜினியின் முழு பேச்சையும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். எழுச்சி அரசியல் மிகவும் முக்கியமான சொற்றொடராக பேசு பொருள் ஆனது.

ஆனால் அடுத்த ஒரிரு வாரங்களுக்குள் கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியதால் ரஜினி மக்கள் மன்றத்தினர், சுறுசுறுப்புடன் நிவாரணப் பணிகளில் இறங்கி விட்டனர். பேரிடர் காலங்களில், தங்கள் தலைவரின் கட்டளைக்கும் காத்திராமல், உடனடியாக களம் இறங்கும் ரஜினி ரசிகர்கள் கொரோனா நிவாரணத்திலும் தொரந்து நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளை நீக்கம் செய்து , மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையாக இந்த நீக்கம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணியில் அம்பானி என்ற பெயரில் அவ்வப்போது ரஜினி மக்கள் மன்ற நடவடிக்கைகள், நிர்வாகிகள் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பும் மூத்த ரசிகர் ஒருவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மற்ற மன்ற நிர்வாகிகள் மீது பொதுத் தளத்தில் புகார் அளிப்பதும், அவதூறாகப் பேசுவதையும் இவர் வாடிக்கையாக கொண்டவர் என்று கூறுகிறார்கள். ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், நாகர்கோவிலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் கொரோனா பரவிவிடும் என்றும் இந்த நபர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,ரஜினியின் அண்ணன் மூலம் சமாதானப் படலத்தை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முன்னெடுத்துள்ளதாகவும், அதற்காகத் தான் நாகர்கோவில் திருமண நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் இந்த நபருடன் நெருக்கமான தொடர்பில் இருந்து மன்ற தகவல்களை தெரிவித்து, அவருடைய செயலுக்கு உடந்தையாக இருந்ததால் தான் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது., நீக்கப்பட்டவர்களும் மூத்த ரசிகர்கள் தான். யாரை நம்புவது, யாரிடம் பேசுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதால், சக ரசிகரிடம்  நம்பிக்கையுடன் பகிர்ந்த சில தகவல்கள் தவறாக திரிக்கப்பட்டு வெளியே சென்று விட்ட்டது என்று புலம்புகிறார்களாம் நீக்கப்பட்ட நிர்வாகிகள்.

களையெடுப்பு ஆரம்பம்!! தேர்தலுக்காக சுறுசுறுப்புடன் தயாராகும் ரஜினி மக்கள் மன்றம்?

ஆனால் இந்த ஒழுங்கு நடவடிக்கை, அனைத்து ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஊட்டியுள்ளதாகவும் தெரிகிறது. தலைவர் எல்லோரையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார். இந்த களையெடுப்புகள் தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் என்று  ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறுவதையும் கேட்க முடிகிறது.

ரஜினி மக்கள் மன்றம் முடங்கிப் போயுள்ளது, கொரோனா தீவிரத்தால் ரஜினியின் அரசியல் கட்சி தொடக்கம் என்னாகும் என்ற கேள்விகளை எழுப்புபவர்களுக்கு பதிலாக வந்துள்ளது இந்த நீக்கம் என்றே தெரிகிறது.

கொரோனா தொற்று தமிழகத்தில் கட்டுக்குள் வந்தவுடன், வெகு விரைவில் ரஜினி மிகவும் சுறுசுறுப்புடன் அரசியல் களத்தில் இறங்குவார் என்றும் தெரிய வந்துள்ளது.

A1TamilNews.com

From around the web