2001 முதல் ரஜினியின் அரசியல் !

எந்த ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று சொன்னாரோ, அதே ஜெயலலிதாவை 2001ல் மீண்டும் முதல்வராக்கிய தமிழக அரசியல் ரஜினிகாந்துக்கு மிகவும் புதிதானது. அடுத்த தமிழக முதல்வர் ஆக வாய்ப்புள்ளவர் என அவர் மிகவும் நம்பியிருந்த மூப்பனாருடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதா வெற்றி பெற்ற போது, அவருக்குள் பல கேள்விகள் எழுந்ததில் ஆச்சரியமில்லை. ரஜினியின் அரசியல் பாடம் அத்தோடு முடிந்துவிடவில்லை. 2004 பாராளுமன்ற தேர்தலின் போது ஒரு பேட்டியளித்தார்.
 
2001 முதல் ரஜினியின் அரசியல் !ந்த ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று சொன்னாரோ, அதே ஜெயலலிதாவை 2001ல் மீண்டும் முதல்வராக்கிய  தமிழக அரசியல் ரஜினிகாந்துக்கு மிகவும் புதிதானது. அடுத்த தமிழக முதல்வர் ஆக வாய்ப்புள்ளவர் என அவர் மிகவும் நம்பியிருந்த மூப்பனாருடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதா வெற்றி பெற்ற போது, அவருக்குள் பல கேள்விகள் எழுந்ததில் ஆச்சரியமில்லை.
 
ரஜினியின் அரசியல் பாடம் அத்தோடு முடிந்துவிடவில்லை. 2004 பாராளுமன்ற தேர்தலின் போது ஒரு பேட்டியளித்தார். நான் இந்தியா முழுவதும் சுற்றி வந்தேன், எல்லா இடங்களிலும் வாஜ்பாயி தலைமையிலான பாஜகவுக்கு அமோக ஆதரவு உள்ளது. ஆகவே மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என்றார். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது. 
தமிழ்நாட்டில் வழக்கம்போல் அரசியல் கூட்டணிகளும் மாறின. மக்களும் வழக்கம்போல் மூன்றே வருடங்களில் மீண்டும் ஒரு  ‘யு டர்ன்’ அடித்து மாற்றி வாக்களித்தனர். அதுவும் எப்படி? 39 இடங்களும் திமுக கூட்டணிக்கு போனது. ஆனால் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி. அதன் பிறகு சுத்தமாகவே அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டார் ரஜினி.
 
பின் அனைத்து கட்சிகளுடனும் நல்ல உறவை வளர்த்துக் கொண்டார். வாஜ்பாயி, அத்வானி, சிதம்பரம், ஜெயலலிதா, கருணாநிதி, சந்திரபாபு நாயுடு, பால் தாக்கரே, எஸ்.எம்.கிருஷ்ணா பின்னர் நரேந்திர மோடி, வைகோ, திருமாவாவன், அன்புமணி ராமதாஸ் என ரஜினியின் நட்பு வட்டம் எல்லா கட்சியிலும், எல்லா மட்டத்திலும் இருந்தது. 
 
அதுமட்டுமல்லாமல், அமிதாப், ஷாருக்கான், அமிர்கான், சல்மான்கான், சிரஞ்சீவி, சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோணி என அனைத்து துறைகளிலும் உள்ளவர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் மனிதராக ரஜினிகாந்த் உருவானார். கடல்தாண்டி சொல்வதானால் மலேசிய பிரதமர் அவருடைய வீட்டுக்கு வரும் அளவுக்கு செல்வாக்கு இருந்தது. தாய்லாந்து இளவரசி விமானநிலையத்துக்கு வந்து ரஜினிகாந்தை வழியனுப்பினார்.
 
ஆனால் அரசியல் மட்டும் பேசவேயில்லை . ஊடகங்கள் இவர்களாகவே ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு என ஜோசியம் சொல்லி செய்தி வெளியிட்டு, பின் வலிய போய் இவர்களாகவே கேட்டு,யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெளிவாகச்  சொன்னபோதெல்லாம்  “ரஜினி பல்டி” என்று இவர்களாகவே செய்தி வெளியிட்டனர். 1996 முதல் ரஜினிகாந்தின் பெயரை இழுக்காமல் எந்த தேர்தலும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த் மிகத் தெளிவாக இருந்தார். வீட்டிற்கே போய் மோடி சந்தித்தபோதும் பாஜகவுக்கு ஆதரவளிக்கவில்லை ரஜினிகாந்த். அதே போல் தன் மனதுக்கு பட்டதை யாருக்கும் பயப்படாமல் சொன்னவரும் அவர் மட்டுமே.
 
ஊழல் வழக்கில் 2 மாதம் சிறை சென்று ஜெயலலிதா திரும்பியபோது மனிதாபிமான ரீதியில் கூட எந்த அரசியல் கட்சியும், ஜெயலலிதாவின் நண்பர்கள், கூட்டணி கட்சிகள் உட்பட எவரும் வாய் திறக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருக்க பிராத்திப்பதாகவும், தீபாவளி வாழ்த்தும் தெரிவித்தார். நெகிழ்ந்து போனார் ஜெயலலிதா. இது அதிமுகவினரால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவ்வளவு சீக்கிரம் ஜெயலலிதா இதை செய்யமாட்டார். 
 
ஆனால் அன்று அவர் இருந்த மனநிலையில் ரஜினியின் இந்த அறிக்கை அவருக்கு பெரும் ஆறுதலாக இருந்திருக்கும்.அதனால்தான் அடுத்த வந்த பதவி ஏற்பு விழாவுக்கு ரஜினிகாந்த் மட்டுமே அழைக்கப்பட்டார்.  பதவியேற்பு விழாவில் அதிமுக பிரமுகர்கள் ரஜினிகாந்த்துடன் செல்பி எடுத்துக் கொண்டபோதும் ஜெயலலிதா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 
 
இன்று விதி வசத்தால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் நம்மிடையே  இல்லை. தமிழகம் ஒரே நேரத்தில் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தலைமையற்று இருக்கிறது. மக்கள் மாற்று சக்தியை தேடுகிறார்கள், புதிதாக ஒருவரை விரும்புகிறார்கள. 22 வருடங்கள் பல அரசியல் பாடங்களை கற்றுக்கொண்டுவிட்ட ரஜினிகாந்த் இது தனக்கான சமயம் என்று நினைக்கிறார். 1996 போன்ற சூழல் அதற்கு பின் வரவேயில்லை. இன்று அதைவிட நல்ல சூழல் உள்ளது. ஆனால் இந்த சூழ்நிலையை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்து முதல்வராகும் எண்ணம் ரஜினிக்கு சுத்தமாக இல்லை. 
 
தன் அனுபவத்தை வைத்து, மக்களுக்கு தன்னால் உண்மையாகவே நல்லது செய்ய முடியுமா என தீர ஆலோசித்து, அப்படி வந்தால் தன் திட்டம் என்ன? தன் கொள்கை என்ன ? தன்னுடன் யார் இருக்கவேண்டும், எப்படிப்பட்டவர்களை தன்னுடன் வைத்துக் கொள்ளவேண்டும் என அனைத்தையும் தீர்மானித்து, அதற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் சேவை என்பது “பகுதி நேர வேலை” அல்ல, அதற்கு முழுநேர அர்ப்பணிப்பு வேண்டும். ஆக இப்போது, தான் செய்யும் வேலையில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்து வெற்றியை குவிக்கிறாரோ அந்த வேலையை முழுவதும் முடித்துவிட்டு மக்கள் சேவைக்கு வரவேண்டும் என நினைக்கிறார்.
 
இந்த அரசாங்கத்தை குறை சொல்லவும், விமர்சிக்கவும், ஊடகங்கள், எதிர்க் கட்சிகள், வருங்கால முதல்வர் கனவில் இருப்பவர்கள் என ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களால் அதை மட்டுமே செய்யமுடியும். அதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது. அதாவது பேசும் நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியை அகற்றிவிட்டு, மக்கள் ஆட்சியை கொடுக்கும் நிலையில் ரஜினிகாந்த் இருக்கிறார். மற்றவர்கள் பேசுகிறார்கள். இவர் செயலில் இருக்கிறார். பத்தோடு பதினொன்றாக அறிக்கை கொடுக்கவும், தினமும் ட்விட்டரில் குரல் கொடுக்கவும் ரஜினிகாந்த் விரும்பவில்லை.
அதனால் மக்களுக்கு என்ன நல்லது நடந்துவிடப் போகிறது என நினைக்கிறார். அதற்குப் பதில் தான் அரசியலுக்கு வந்தால் என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்கிற தனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, நதிநீர் இணைப்பு என தன் அடிப்படை கொள்கையை தெரியப்படுத்தியும் விட்டார்.  என்ன அழுத்தம் கொடுத்தாலும், என்ன விமர்சனம் செய்தாலும், முழுக்க,முழுக்க தயாராகாமல் வரவேமாட்டார் ரஜினிகாந்த். சரியான நேரத்தில் வருவார்.
 
அப்படி அவர் வரும்போது தமிழக மக்கள் மேம்பாட்டுக்கான அனைத்தும் தயார் நிலையில் இருக்கும். ஓளிவு, மறைவு இல்லாமல் அனைத்தையும் சொல்வார் ரஜினிகாந்த். இதுவரை அவர்மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் வரும்.
  
– மனோகரன்
 

 

From around the web