சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை!

சென்னை: புதன், வியாழக்கிழமைகளில் சென்னையில் லேசானது முதல் பரவலான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் வானம் மேக மூட்டத்துடனே இருக்கும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். ஆந்திரப் பிரதேச கடலோரப்பகுதியில் புயல் போன்ற காற்றழுத்த தாழ்வுநிலை காணப்படுவதால், வடக்கு தமிழ்நாடு முதல் தெற்கு ஆந்திரா வரையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு
 

சென்னையில்  இரண்டு நாட்களுக்கு மழை!

சென்னை: புதன், வியாழக்கிழமைகளில் சென்னையில் லேசானது முதல் பரவலான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் வானம் மேக மூட்டத்துடனே இருக்கும்.  அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். 

ஆந்திரப் பிரதேச கடலோரப்பகுதியில் புயல் போன்ற காற்றழுத்த தாழ்வுநிலை காணப்படுவதால், வடக்கு தமிழ்நாடு முதல் தெற்கு ஆந்திரா வரையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

From around the web