மோடி, பாஜகவின் தூக்கத்தை மொத்தமாகக் கெடுத்த ராகுல் காந்தி!

வறுமைக்கு எதிரான இறுதி யுத்தம் என்ற முழக்கத்துடன் ராகுல் காந்தி ஒரு திட்டத்தை வெளியிட்டார் மூன்று தினங்களுக்கு முன்பு. ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம் இலவசமாக தரப்படும் என்று. அவ்வளவுதான்… பாஜக மற்றும் பிரதமர் மோடியின் தூக்கம் மொத்தமாகக் கெட்டது, என்ன பேசுகிறோம் என்றே உணராமல் பிதற்ற ஆரம்பித்துவிட்டனர். அரசு அமைப்பான நிதி ஆயோக் (திட்டக்குழு) தலைவரெல்லாம் வாலன்டியராக வந்து ‘ராகுல் காந்தி சொன்னது சாத்தியமே இல்லை… இது காங்கிரஸின் திட்டமிட்ட நாடகம்,” என்றெல்லாம்
 

மோடி, பாஜகவின் தூக்கத்தை மொத்தமாகக் கெடுத்த ராகுல் காந்தி!றுமைக்கு எதிரான இறுதி யுத்தம் என்ற முழக்கத்துடன் ராகுல் காந்தி ஒரு திட்டத்தை வெளியிட்டார் மூன்று தினங்களுக்கு முன்பு. ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம் இலவசமாக தரப்படும் என்று. அவ்வளவுதான்… பாஜக மற்றும் பிரதமர் மோடியின் தூக்கம் மொத்தமாகக் கெட்டது, என்ன பேசுகிறோம் என்றே உணராமல் பிதற்ற ஆரம்பித்துவிட்டனர். அரசு அமைப்பான நிதி ஆயோக் (திட்டக்குழு) தலைவரெல்லாம் வாலன்டியராக வந்து ‘ராகுல் காந்தி சொன்னது சாத்தியமே இல்லை… இது காங்கிரஸின் திட்டமிட்ட நாடகம்,” என்றெல்லாம் கூற ஆரம்பித்துவிட்டார்.

மோடியும் அவரது அமைச்சர்களும் நாள் முழுக்க ராகுல் காந்தியின் இந்த வறுமை ஒழிப்புத் திட்டம் பற்றித்தான் எதிர்மறையாகப் பேசி வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தான் ஒரு நிதியமைச்சர் என்ற உணர்வே இல்லாமல், சராசரி அரசியல்வாதி மாதிரியே பேசிக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் ராகுல் காந்தி அறிவித்திருப்பது பலவகையிலும் சாத்தியப்படும் ஒரு திட்டமே. தேக்கமடைந்திருக்கும் பொருளாதாரத்தை, வேகப்படுத்தும் திட்டம் இது. அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட ஒரு காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம். அதாவது நிரந்தரமாக ஆண்டு தோறும் ரூ 72 ஆயிரம் தரப்படும் என்று அர்த்தமல்ல. ஆண்டுதோறும் பயனாளிகள் மாறுவார்கள். சுழற்சி முறையில் ஆண்டுக்கு 5 கோடி குடும்பங்களைக் கண்டறிந்து இந்தத் தொகையை அவர்கள் கணக்கில் நேரடியாக வரவு வைப்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்.

இப்போதுள்ள பல்வேறு மறைமுக மானியங்கள், சலுகைகளைக் குறைத்துவிட்டு அல்லது அடியோடு ரத்து செய்தாலே போதும், இந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தேவையான ரூ 3.5 லட்சம் கோடிக்கு மேலேயே நிதி கிடைத்துவிடும் என்பதைப் புரிந்துதான் ராகுல் காந்தி இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்த குடும்பம் அவர்களுடையது. அவர்களுக்குத் தெரியாதா இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்தலாம்… அதற்கு நிதி மூலத்தை எப்படிப் பெறலாம் என்பது?” என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ராகுல் காந்தியின் இந்த ரூ 72 ஆயிரம் இலவச அறிவிப்பு, அதற்கு படித்தவர்கள், பாமரர்கள், மேதைகள், மீடியாக்கள் கிடைத்துள்ள முக்கியத்துவம் – வரவேற்பு, இவற்றைப் பார்த்த பிரதமர் மோடியும் அவரது பாஜக கூடாரமும் பதறிப் போய், அதை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.

மோடி, பாஜகவின் தூக்கத்தை மொத்தமாகக் கெடுத்த ராகுல் காந்தி!

குறிப்பாக ராகுலின் திட்டம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் விரிவாகக் கூறிய பிறகு தூக்கத்தைத் தொலைத்தே விட்டார்கள் பாஜகவினர். இதன் விளைவுதான் பாதுகாப்புத் துறை எப்போதோ சாதித்துவிட்ட செயற்கைக் கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை விஷயத்தை, ஏதோ பாஜகவினரே செய்த சாதனை மாதிரி பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ஆனால் அவரது போதாத காலம், இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க காமெடியாகிவிட்டது. மோடியின் தேர்தல் ஸ்டன்ட் இது என்பதை சாமான்யரும் புரிந்து கிண்டலடிக்கும் அளவுக்குப் போய்விட்டது. சமூக வலைத் தளங்களிலோ, சௌக்கிதார் சமாச்சாரத்தை விட உச்சகட்ட காமெடியாகப் பார்க்கப்படுகிறது இந்து மிஷன் சக்தி அறிவிப்பு.

– முதன்மை ஆசிரியர்
வணக்கம் இந்தியா

From around the web