அரசை விமர்சிக்க அச்சமாக இருக்கிறது – ராகுல் பஜாஜ்

மத்திய அரசை விமர்சிக்க நாட்டில் பலரிடம் அச்சம் நிலவுவதாக அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எக்னாமிக்ஸ் பத்திரிகையின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய முன்னணி தொழிலதிபர் ராகுல் பஜாஜ், அரசை விமர்சிப்பத்தில் மக்களுக்கு அச்சம் இருக்கிறது என்று கூறினார்.
 

அரசை விமர்சிக்க அச்சமாக இருக்கிறது – ராகுல் பஜாஜ்த்திய அரசை விமர்சிக்க நாட்டில் பலரிடம் அச்சம் நிலவுவதாக அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எக்னாமிக்ஸ் பத்திரிகையின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய முன்னணி தொழிலதிபர் ராகுல் பஜாஜ், அரசை விமர்சிப்பத்தில் மக்களுக்கு அச்சம் இருக்கிறது என்று கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்போது யாரை வேண்டுமானாலும் விமர்சிக்க சுதந்திரம் இருந்ததாகவும், தற்போது அவ்வாறு விமர்சித்தால் அரசு அதை ஏற்றுக் கொள்ளுமா என்கிற அச்சம் இருப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையிலேயே ராகுல் பஜாஜ் தெரிவித்தார். மேடையிலேயே இதற்கு பதிலளித்த அமித் ஷா, அரசு குறித்த விமர்சனங்கள் அன்றாடம் ஊடகங்களில் வந்து கொண்டிருப்பதாகவும், அவ்வாறு அச்சம் இருக்குமேயானால் அது சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், ராகுல் பஜாஜின் இந்த கருத்துதான் நாடு முழுவதும் பிரதிபலிக்கிறது என காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web