ரஷியாவில் அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி!2036 வரை புதின் ஆட்சியில் நீடிப்பார்!

உலகம் முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ரஷியாவின் அதிபர் தேர்தல் முடிவுகள் உலக நாடுகளிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி இருந்தது. ரஷியாவில் அதிபர் விளாடிமிர் புதினின் 6 ஆண்டு ஆட்சிக்காலம் 2024ம் ஆண்டு முடிவடைய இருக்கிறது. அவரது ஆட்சிக்காலத்தை மேலும் 12 ஆண்டுகள் அதாவது 2036 வரை நீட்டிக்கும் வகையில் ரஷியாவின் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதினின் இந்த அதிரடி நடவடிக்கைக்கும் நாடாளுமன்றத்தின் அவைகள் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டன. புதிய அரசியல் சாசனத்தில்
 

ரஷியாவில்  அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி!2036 வரை புதின் ஆட்சியில் நீடிப்பார்!லகம் முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ரஷியாவின் அதிபர் தேர்தல் முடிவுகள் உலக நாடுகளிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

ரஷியாவில் அதிபர் விளாடிமிர் புதினின் 6 ஆண்டு ஆட்சிக்காலம் 2024ம் ஆண்டு முடிவடைய இருக்கிறது. அவரது ஆட்சிக்காலத்தை மேலும் 12 ஆண்டுகள் அதாவது 2036 வரை நீட்டிக்கும் வகையில் ரஷியாவின் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதினின் இந்த அதிரடி நடவடிக்கைக்கும் நாடாளுமன்றத்தின் அவைகள் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டன.

புதிய அரசியல் சாசனத்தில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்து புத்தகங்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும் பொதுமக்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற புதினின் கருத்திற்கு ஏற்ப பொதுவாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் 7 நாட்கள் நடந்து முடிந்த பொதுவாக்கெடுப்பில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் சுமார் 74 சதவீத வாக்காளர்கள் புதிய சீர்திருத்தங்களை ஆதரித்துள்ளனர் என ரஷியாவின் மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதனால் மக்களின் அமோக ஆதரவோடு ரஷியாவில் 2036ம் ஆண்டு வரை புதினின் அதிபர் ஆட்சி தொடரும்.

A1TamilNews.com

From around the web