சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – மின்மினுக்கும் பயோ பே !

கடலும் மலையும் – தீவுப் பயணம் 9 வீக் எண்ட் ஊர் சுத்திப் பாக்கனும்னா இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம்ங்க. ஒரே அலைச்சலா இருக்கு” – நேத்து சொன்ன டயலாக்கை கொஞ்சம் மாத்திச் சொன்னாங்க. விடிஞ்சதும், பயபுள்ளைகிட்டே இன்னைக்கு உஷாரா இருக்கனும். வாயைக் கொடுத்து மாட்டிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். லேட்டா முழிச்சி, ப்ரெஞ்ச் சாப்பிட்டு கொஞ்ச நேரம் டிவி பாக்க விட்டுட்டு, பசங்க டைம்-ஐ ஓட்டிட்டேன். சாயங்காலம் கால்ஃப் கோர்ஸ் போகலாம் ன்னு
 
 
 கடலும் மலையும் – தீவுப் பயணம் 9
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – மின்மினுக்கும் பயோ பே !
வீக் எண்ட் ஊர் சுத்திப் பாக்கனும்னா இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம்ங்க. ஒரே அலைச்சலா இருக்கு” – நேத்து சொன்ன டயலாக்கை கொஞ்சம் மாத்திச் சொன்னாங்க.  
 
விடிஞ்சதும், பயபுள்ளைகிட்டே இன்னைக்கு உஷாரா இருக்கனும். வாயைக் கொடுத்து மாட்டிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
 
லேட்டா முழிச்சி, ப்ரெஞ்ச் சாப்பிட்டு கொஞ்ச நேரம் டிவி பாக்க விட்டுட்டு,  பசங்க டைம்-ஐ ஓட்டிட்டேன். சாயங்காலம் கால்ஃப் கோர்ஸ் போகலாம் ன்னு சொன்னதும் பையனும் பொண்ணும் பட்டத்தை எடுத்துட்டு வந்தாங்க. கால்ஃப் க்ளப்ஸ் ஐ விட்டுட்டு, நண்பரோட தொரட்டிக் கம்பை நான் எடுத்துகிட்டேன்.  
 
கால்ஃப் பயிற்சி எடுக்கும் மைதானத்திற்கு முன்னே பட்டம் விட்டோம். சாயங்காலம் ஆகிவிட்டதாலோ, வேலை நாள் என்பதாலோ, அப்போது கால்ஃப் விளையாட யாரும் இல்லை. பட்டம் விட்டுட்டு வர்ற வழியிலே நண்பன் கொடுத்த தைரியத்தில் ஒரு குட்டையான தென்னை மரத்தில் நான்கைந்து இளநீரை தொரட்டி கம்பை வைத்து பறித்தேன். ஆளுக்கொரு கையில் எடுத்து வந்தோம். வீட்டிலேயே இருந்த அம்மணிக்கு ஏதாவது கொடுக்கனும்லே!
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – மின்மினுக்கும் பயோ பே !
நாலு நாளுக்குப் பிறகு எங்க நினைப்பு வந்த நண்பனும் வீட்டுக்கு வந்தான். சாப்பிட்டுக் கொண்டே எங்களோட சான் யுவான் அனுபவங்களைக் கேட்டறிந்தான். இளநீரைப் பார்த்ததும், ”பரவாயில்லடா, தேறிட்டே.. கீப் இட்.. பீ ஸ்போர்ட்டிவ்”  என்கரேஜ் பண்றாராம். நாளைக்கு சீக்கிரம் வந்துடுறேன். ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னான்.
 
“எந்த இடம் அங்கிள்” பொண்ணுக்கு ஆர்வம் தாங்கல்ல. 
 
“நாளைக்குப் பார்க்கலாம் டா” சொல்லிட்டு போய்ட்டான்.
 
மறுநாள் வெள்ளிக்கிழமை சாயங்காலம் சொன்னது மாதிரி சீக்கிரம் வந்தான். டீ குடிச்சிட்டு காரில் கிளம்பினோம். தெற்கு நோக்கிப் போனோம். வழியில் பான்சே என்ற ஊரைக் கடந்து சென்றோம். சான் யுவான் மாதிரி இல்லாட்டாலும் இதுவும் பழமையான ஊர்,  ஒரு நாள் பகலில் வந்து பாருங்கள் என்று நண்பன் சொன்னான். 
 
ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஹைவேஸ் லே இருந்து விலகி ஊர்ப்புறச் சாலைக்குள் போனோம்.  வந்து சேர்ந்த இடத்திற்கு பெயர் லா பர்குயெரா.  வழக்கமான டூரிஸ்ட் நகரம் போல் இருந்தது. ஒரு கடையில் அந்த ஊரில் பிரபலமான மீன் உணவு சாப்பிட்டோம்.கடை வீதியில் உள்ளூர் மற்றும் வெளியூர் கைவினைப் பொருட்கள் கிடைத்தது. அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ஜாலி தான். 
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – மின்மினுக்கும் பயோ பே !
 
“வாங்க போட் கிளம்பிடும்” ன்னு நண்பன் அழைத்தான்.
 
இந்நேரத்தில் இருட்டுல போட்ல யா? புரியாமல், எங்கேடான்னு கேட்டேன். வாங்க போகும் போது தெரியும்னான்.
 
போட்டுக்கு போறதுக்கு டிக்கெட் வாங்க கூட்டம் லைன்லே நிறைய இருந்துச்சு. நண்பன் ஆன்லைன்லே டிக்கெட் வாங்கிட்டாருன்னு புரிந்தது. நேரா போயிட்டோம். அங்கே தான் “Bio Luminescent Bay” அப்படின்னு ஒன்னைப் பத்தி தெரிஞ்சிகிட்டோம். ஒரு அரை மணி நேரம் இருக்கும். போட்ல பாட்டுப் போட்டுகிட்டு, சிலர் அதுக்கு ஆடிக்கிட்டு போய்கிட்டே இருந்தது.
 
நாம வரவேண்டிய இடத்துக்கு வந்துட்டோம்னு கேப்டன் சொன்னாரு. இருட்டில் ஒரு வளைவான பகுதியாகத் தெரிந்தது. ஓரத்தில் மலையடிவாரம் மாதிரியும் இருந்துச்சு. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் போது, வலது பக்கம் பாருங்கன்னு அறிவிச்சாரு. 
 
ஓருத்தர் படகின் உச்சியிலிருந்து சர்ரென்று கடலுக்குள் குதித்தார். அவர் தண்ணீருக்குள் விழுந்தவுடன் அந்த இடமே அப்படி ஒரு பிரகாசமானது. அவரைச் சுற்றி சீரியல் லைட் எரிஞ்சமாதிரின்னு கூட சொல்லலாம். அப்படி அங்கே நீச்சல் அடிச்சு சுத்தி அடுத்தப் பக்கம் வந்தாரு. பளிச் பளிச்னு கூடவே வெளிச்சமும் அந்தப் பக்கத்தில் இன்னொருத்தர் குதிக்கவும் இரண்டு பேரும் ஒளி வெள்ளத்தில் மிதந்தார்கள். 
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – மின்மினுக்கும் பயோ பே !
 
ஆளுக்கொரு வாளியில் தண்ணீரை இறைத்து மேலே தந்தார்கள். அதில் கையை விட்டு அலம்பினால் ஒளிருது.  பொண்ணுக்கும் பையனுக்கும் ஆச்சரியம். எங்களுக்கும் தான்.
 
அதன் பிறகு ஒரு விளக்கம் தந்தார்கள்.  ஒரு வகை செடியின் வேர்களில் உள்ள வேதிப் பொருள் தண்ணீரில் கலந்து இப்படி ஒளிர்கிறதாம். அமாவாசை போன்று இருட்டான நாட்களில் இந்த வெளிச்சம் ரொம்பவும் நன்றாகத் தெரிகிறது.  நிலா வெளிச்சம் இருக்கும் போது  இந்த ப்ரைட் பார்க்கத் தெரியாதாம். எப்போ நல்லாத் தெரியும்ன்னு பார்த்து டிக்கெட் வாங்கியிருக்கார் நம்மாளு.
 
“நல்லா இருக்கா டா” பையனைப் பார்த்து நண்பன் கேட்க,
 
“சூப்பர் அங்கிள்” ன்னு பொண்ணும் சேர்ந்து சொன்னாள்.
 
திரும்பி வந்து மீண்டும் கடைவீதியில் கொஞ்ச நேரம்  சுத்திட்டு வீடு வந்து சேர்ந்தோம். வர்ற வழியில், “இதை விட இன்னொரு சூப்பர் இடம் இருக்கு” அடுத்த வாரம் ஏற்பாடு பண்றேன்னு சொன்னான் நண்பன்.
 
தொடரும்
 
– அட்லாண்டா கண்ணன்
 
முந்தைய வாரம்
 
 

From around the web