சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – குதிரையும் பசுவும்

கடலும் மலையும் – தீவுப் பயணம் 10 அப்பா, இன்னிக்கு சட்டர்டே. அங்கிள் நம்ம கூட வருவாங்களா? எங்கே போறோம்ன்னு பொண்ணு கேட்டாள். கொஞ்ச நேரத்தில் நண்பனும் ரெடியாகி வந்து சேர்ந்தார். எல்லோரும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுகிட்டே, எங்கே போகலாம்னு பேசினோம். பையனும் பொண்ணும் பீச் போகனும்னு சொன்னாங்க.. ஒரு ஒயிட் சாண்ட் பீச் இருக்கு.. போட்ல போனும்.. இப்ப போனா லேட் ஆயிடும்..விடியக்காலமே இங்கேருந்து கிளம்பனும். நாளைக்கு போலாமான்னு நண்பன் கேட்க, பிள்ளைங்க இன்னைக்கேன்னு அடம் பிடிக்க
 

 கடலும் மலையும் – தீவுப் பயணம் 10

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – குதிரையும் பசுவும்
ப்பா, இன்னிக்கு சட்டர்டே. அங்கிள் நம்ம கூட வருவாங்களா? எங்கே போறோம்ன்னு பொண்ணு கேட்டாள்.

கொஞ்ச நேரத்தில் நண்பனும் ரெடியாகி வந்து சேர்ந்தார். எல்லோரும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுகிட்டே, எங்கே போகலாம்னு பேசினோம். பையனும் பொண்ணும் பீச் போகனும்னு சொன்னாங்க..

ஒரு ஒயிட் சாண்ட் பீச் இருக்கு.. போட்ல போனும்.. இப்ப போனா லேட் ஆயிடும்..விடியக்காலமே இங்கேருந்து கிளம்பனும். நாளைக்கு போலாமான்னு நண்பன் கேட்க, பிள்ளைங்க இன்னைக்கேன்னு அடம் பிடிக்க வேறு ஒரு பீச் போலாம்னு முடிவு செஞ்சோம்.

கொஞ்ச நேரத்திலே லஞ்ச் ரெடி பண்ணிடுறேன். எடுத்துட்டுப் போயிடலாம்னு அம்மணியும் லஞ்ச்சுடன் ரெடியாகிட்டாங்க.. மேற்கு நோக்கிப் பயணம். பான்சே கடந்து போகும் போது, “என்னப்பா நேத்து போன வழியிலேயே போறோமே,” ன்னு கேட்டேன்.

 

ஆமா, லா பர்குயெரா போன வழியிலே தான் போனும். ஆனால் உள்ளே போக வேண்டியதில்லை என்று தொடர்ந்தான். நேற்று கொஞ்சம் இருட்டத் தொடங்கிய நேரம் என்பதால் ஒரு சில மைல்கள் கொண்ட ஏற்ற இறக்கமான சாலையை சரியாக கவனிக்கவில்லை.. பகலில் பார்க்க மிகவும் ரம்மியமாக இருந்தது.

ஒரு சின்ன டீடோர். இங்கே ஒரு குதிரைப் பண்ணை இருக்கிறது. பசங்க சவாரி போகலாம்ன்னு கூட்டிச் சென்றான். ஒரு தனியார் ரிசார்ட் மாதிரி இருந்தது. அங்கே குதிரைகள் வளர்க்கிறார்கள். பார்க் இருக்கிறது. பசங்க ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன ரைட் கூட்டிட்டுப் போனோம்.

மீண்டும் மெயின்ரோடு.. கொஞ்ச நேரத்தில் இடதுபுறம் திரும்பி ஒரு பீச்சுக்கு போனது வண்டி. இது கோஸ்ட் கார்ட், ஷவர் என பொதுமக்கள் நிறையப் பேர் வரக்கூடிய பீச். இது தானா நாம வரவேண்டிய இடம் என்று கேட்டேன்.

“இல்லே, இங்கே பசங்க கொஞ்ச நேரம் குளிச்சு விளையாடிட்டு, ஷவர்லே குளிச்சிட்டு லஞ்ச் சாப்பிட்டுட்டு போலாம்.”

அமைதியான ஆழமில்லாத பீச்சை ஒட்டிய கடல். பசங்க விளையாட சேஃப்டியான இடம். வெளியே தென்னை மற்றும் வேறு மரங்கள். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பீச். நுழைவுக் கட்டணம் உண்டு.

போர்ட்டோ ரிக்கோ போனா பீச்சில குளிக்கிறது முக்கியம் இல்லையா. ஒரு மணி நேரம் கிட்டே, ஆட்டம் பாட்டம் தான். டயர்டாகி வெளியே வந்து ஷவர்ல குளிச்சா செம பசி. வீட்டுச் சாப்பாடு பெர்ஃபெக்ட். எல்லோரும் அம்மணிக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிட்டு, அங்கிருந்து கிளம்பினோம்.

“அடுத்து எங்கே போறோம் அங்கிள்”

“கபோ ரோஹோ.. போர்ட்டோ ரிக்கோவின் தென் மேற்கு கோடிக்கு போறோம்மா”

வழியில் ஒரு பால் பண்ணை தெரிந்தது. எப்படிப்பா இங்கேயும் மாட்டுப் பண்ணை வச்சிருக்காங்களா?ன்னு அப்பாவியாக நான் கேட்க, பால் முட்டை போன்ற ஒரு சில அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தான் இங்கே உள்ளூர் உற்பத்தி. மத்ததெல்லாம் அமெரிக்காவிலேருந்து இறக்குமதி தான் என விளக்கம் சொன்னான் நண்பன்.

அங்கிள், மாடு பாக்கலாமான்னு பொடியன் கேட்க, கொஞ்ச தூரம் போன வண்டி யு-டர்ன் அடித்து மாட்டுப் பண்ணைக்குள் நுழைந்தது. ஒரு சில ஊழியர்கள் தான் இருந்தாங்க. அவங்களுக்கு இங்க்லீஷ் அதிகமாகத் தெரியவில்லை. சுத்திப் பாக்கலாமான்னு அரைகுறை ஸ்பானிஷில் நண்பன் கேட்க, அனுமதித்தார்கள்.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – குதிரையும் பசுவும்

அப்போது தான் மாடுகளை கறவைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்கள். ஊர்லே பழைய தியேட்டர்களில் டிக்கெட் கவுண்டருக்கு சின்னதா வழி வச்சிருப்பாங்களே. அந்த மாதிரி சின்னதான பாதைக்குள் மாடுகள் வருது. அங்கே டியூபுடன் தொங்கிக் கொண்டிருக்கு கறவை மெஷின்களை மாடுகளின் காம்புகளில் பொருத்துகிறார்கள்.

முன்னால் தீவனம் மேலிருந்து பைப் வழியாக கொட்டுகிறது. பால் கறந்து டேங்க்குக்ப் போய் விடுகிறது. அது குளீருட்டப்பட்ட டேங்க். அடுத்த நாள் பால் வண்டி வந்து எடுத்துட்டுப் போயிடுமாம். அது எப்போ பேக்கிங்க் சென் டர் போயி, பேக் பண்ணி கடைக்கு வந்து நம்ம வீட்டுக்கு வருதுன்னு கணக்கு பார்த்தா, கொஞ்சம் கலவரமாத்தான் இருந்துச்சு. மாடுகளை மெஷினாட்டம் கம்பிகளுக்குள்ளே திணிச்சி மெஷின் மூலம் பாலை உறிஞ்சி எடுத்து… பார்த்துட்டு பசங்க ரொம்பவே சோகமாயிட்டாங்க..

ஏங்க, பால் இல்லாமல் காப்பி குடிப்பீங்களா ன்னு அம்மணி குண்டை வீச, நாங்கெல்லாம் கடுங்காப்பி குடிச்சி வளந்தவங்களாக்கும்ன்னு சவடால் விட்டாலும், இன்னி வரைக்கும் மாறல்ல. ஆனா, அந்தப் பண்ணையை நினைச்சா பால் வேணுமான்னு தான் தோணுது.

ஜாலியான வெகேஷன் ட்ரிப்பில் இப்படி ஒரு சென்டிமெண்ட் ஆகும்ன்னு நண்பன் நினைக்கல்ல. நாங்களும் நினைக்கல்ல. போக வேண்டிய ‘கபோ ரோஹோ’வும் இன்னும் வரல்லே.

அடுத்த வாரம் தொடர்வோம்…

– அட்லாண்டா கண்ணன்.

From around the web