இன்று முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்!தமிழக அரசு உத்தரவு!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் படி, தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கும் நேரத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று முதல் சென்னை உட்பட ரூ.10,000க்கும் குறைவான வருமானம் உள்ள அனைத்து சிறிய வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என
 

இன்று முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள்  தரிசனம்  செய்யலாம்!தமிழக அரசு உத்தரவு!மிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் படி, தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கும் நேரத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று முதல் சென்னை உட்பட ரூ.10,000க்கும் குறைவான வருமானம் உள்ள அனைத்து சிறிய வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்த வரை மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற்று திறக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள்து.

A1TamilNews.com

From around the web