FASTAG கட்டண வசூலில் குளறுபடி! ஏமாற்று வேலையா?

சுங்கச்சாவடிகளில் FASTAG மூலம் பணம் செலுத்தும்போது ஒருமுறை செய்த பயணத்திற்கு இருமுறை கட்டணம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நிகழ்வதாக புகார் எழுந்துள்ளது. சென்னையிலிருந்து டிசம்பர் 22ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் பரணூர் சுங்கச்சாவடியை காரில் கடந்த ஒருவரது கணக்கில் இருந்து 60 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதே கார் அதே சுங்கச்சாவடியை 22ஆம் தேதி இரவே கடந்தபோது ஒருநாளுக்குரிய கட்டணமாக 30 ரூபாய் FASTAGலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 22ஆம் தேதி இரவு 9 மணிக்கு
 

FASTAG கட்டண வசூலில் குளறுபடி! ஏமாற்று வேலையா?

சுங்கச்சாவடிகளில்‌ FASTAG மூலம் பணம் செலுத்தும்போது ஒருமுறை செய்த பயணத்திற்கு இருமுறை கட்‌டணம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நிகழ்வதாக புகார் எழுந்துள்‌ளது.

சென்னையிலிருந்து டிசம்பர் 22ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் பரணூர் சுங்கச்சாவடியை காரில் கடந்த ஒருவரது கணக்கில் இருந்து 60 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதே கார்‌ அதே சுங்கச்சாவடியை 22ஆம் தேதி இரவே கடந்தபோது ஒருநாளுக்குரிய கட்டணமாக 30 ரூபாய் ‌ FASTAGலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 22ஆம் தேதி இரவு ‌9‌ மணிக்கு 2‌7 நிமிடத்திற்கு சம்பந்தப்பட்ட வாகனம் சுங்கச்சாவடியை இருமுறை கடந்ததாக கூடுதலாக 90 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக 23ஆம் தேதி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

22ஆம் தேதி ஒருமுறை செய்த பயணத்திற்கு இரண்டு தடவை கட்டணம் வசூலிக்கப்பட்‌டதோடு, 22ஆம் தேதி பிடித்தம் செய்த கட்டணத்திற்கான குறுஞ்செய்தி 23ஆம் தேதி மாலை அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல குளறுபடி‌கள் FASTAG மின்னணு பரிமாற்றத்தில் நிகழ்வதாக வாகன ஓட்டிகள் குற்றம்‌சாட்டுகின்றனர். மேலும், இதுபோன்ற புகார் தெரிவிப்பவர்களுக்கு வங்கித் தரப்பில் உ‌ரிய பதில் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web