வெனிசூலாவில் ‘பன்றிக்கறி புரட்சி’… வீதிகளில் மக்கள் போராட்டம்.

கராகஸ்: வெனிசூலா நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பன்றிக்கறி தட்டுப்பாடு ஏற்பட்டதால், மக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். தென் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, பன்றிக் கால் இறைச்சி உணவு, முக்கிய விருந்தாகும். போர்ச்சுகல் நாட்டிலிருந்து தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. உலகச்சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் விலை சரிந்தது முதலாக, வெனிசூலா நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குச் சென்று விட்டது. அதையடுத்து நாட்டில் அரசியல் புரட்சிகளும் நடந்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட, கடும் தட்டுப்பாடு மட்டுமல்லாமல்,
 

வெனிசூலாவில் ‘பன்றிக்கறி புரட்சி’… வீதிகளில் மக்கள் போராட்டம்.

கராகஸ்: வெனிசூலா நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பன்றிக்கறி தட்டுப்பாடு ஏற்பட்டதால், மக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

தென் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, பன்றிக் கால் இறைச்சி உணவு, முக்கிய விருந்தாகும். போர்ச்சுகல் நாட்டிலிருந்து தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

உலகச்சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் விலை சரிந்தது முதலாக, வெனிசூலா நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குச் சென்று விட்டது. அதையடுத்து நாட்டில் அரசியல் புரட்சிகளும் நடந்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட, கடும் தட்டுப்பாடு மட்டுமல்லாமல், தாறுமாறான விலையாகவும் உள்ளது.

இந்நிலையில், ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையாவது பாரம்பரியப்படி கொண்டாடலாம் என்று நினைத்த மக்களுக்கு, இறைச்சி தட்டுப்பாடு பேரிடியாக வந்துள்ளது. போர்ச்சுகல் நாட்டு நிறுவனத்திற்கு பணம் பாக்கி இருப்பதாகவும், வெனிசூலா நிறுவனங்கள் பாக்கியை செலுத்தாமல் கால தாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அரசு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு டோக்கன் மூலமாகவும் பன்றிக் கால் இறைச்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு சார்பில் அதற்கான தொகையை போர்ச்சுகல் நிறுவனத்திற்கு வழங்கி விட்டதாக அதிபர் மதுரோ கூறியுள்ளார். ஆனால் ஆர்டர் வாங்கிய போர்ச்சுகல் நிறுவனம், பணம் வரவில்லை என்று கூறி சப்ளை செய்யவில்லை. அதனால் அரசு சார்பில் வழங்கப்பட இருந்த இறைச்சியும் கொடுக்க முடியவில்லை.

போர்ச்சுகல் அரசு சதி செய்து விட்டதாக அதிபர் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார் . அதை போர்ச்சுகல் அரசு மறுத்துள்ளது. இது வெறும் வியாபார சம்மந்தப்பட்ட விஷயம். குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு இடையே உள்ள வணிக உடன்படிக்கை சார்ந்தது. அரசுக்கு சம்மந்தம் இல்லை என்று கூறியுள்ளனர்.

பொது மக்களுக்கு இரு அரசுகளின் விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை வீதியில் இறங்கி நியாயம் கேட்டு போராடத் தொடங்கி விட்டார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இறைச்சி கூட ஏற்பாடு செய்ய முடியாத அரசு எதற்கு என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த போராட்டத்தை ஊடகங்கள் ‘பன்றிக்கறி புரட்சி’ என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே பொதுமக்களின் அதிருப்திக்கு உள்ளான மதுரோ அரசு, பன்றிக்கறி புரட்சி மூலம் மேலும் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.

From around the web