இயக்குனர், நடிகர் பொன்வண்ணனுக்கு அடிக்கடி நினைவில் வருகிறவர் யார் தெரியுமா?

இயக்குனரும் நடிகருமான பொன்வண்ணன் மிகச் சிறந்த ஓவியரும் ஆவார். தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர் சிவகுமார், பொன் வண்ணன் ஆகிய இருவரும் சிறந்த ஓவியர்களாகவும் அறியப்படுபவர்கள். அவ்வப்போது ஓவியங்களை வரைந்து தனது முகநூலில் பகிர்ந்து வருபவர் பொன்வண்ணன். முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் ஓவியத்தை வரைந்து “என்னமோ தெரியல… இப்பவெல்லாம் அடிக்கடி உங்க நெனப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார் பொன்வண்ணன். 5 ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்து இந்தியாவின் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் அடுத்த
 

இயக்குனர், நடிகர் பொன்வண்ணனுக்கு அடிக்கடி நினைவில் வருகிறவர் யார் தெரியுமா?இயக்குனரும் நடிகருமான பொன்வண்ணன் மிகச் சிறந்த ஓவியரும் ஆவார். தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர் சிவகுமார், பொன் வண்ணன் ஆகிய இருவரும் சிறந்த ஓவியர்களாகவும் அறியப்படுபவர்கள்.

அவ்வப்போது ஓவியங்களை வரைந்து தனது முகநூலில் பகிர்ந்து வருபவர் பொன்வண்ணன். முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் ஓவியத்தை வரைந்து “என்னமோ தெரியல…
இப்பவெல்லாம் அடிக்கடி உங்க நெனப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை,”  என்று குறிப்பிட்டுள்ளார் பொன்வண்ணன்.

5 ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்து இந்தியாவின் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்ற டாக்டர்.மன்மோகன் சிங், 10 ஆண்டுகளாக பிரதமராகவும் மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தார்.

இயக்குனர், நடிகர் பொன்வண்ணனுக்கு அடிக்கடி நினைவில் வருகிறவர் யார் தெரியுமா?

ஆனால், பிரதமராக இருந்த 10 ஆண்டுகளும் ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சியால் பலவீலமான பிரதமர் என்று கேலியாக விமர்சிக்கப்பட்டார் டாக்டர். மன்மோகன் சிங். இது குறித்து 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊடங்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் “ நான் பலவீலமான தலைமை இல்லை. ஊடகங்கள், எதிர்க்கட்சிகளை விட வரலாறு என்னிடம் மிகவும் கனிவாக இருக்கும்” என்று பேசினார்.

டிமானிடைசேஷன் அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளான போது வெளிப்படையாகவே டாக்டர் மன்மோகன்சிங் கை சாமானியர்களும் பிரபலங்களும் பாராட்டத் தொடங்கினார்கள்.

பிரதமர் மோடியின் 6 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு பொன்வண்ணன் போன்ற பிரபலங்கள், ஓவியம் வரைந்து  பாராட்டிப் பேசுவதன் மூலம் , “வரலாறு என்னிடம் மிகவும் கனிவாக இருக்கும்” என்ற டாக்டர்.மன்மோகன் சிங்கின் வாக்கை உண்மையாகி விட்டது என்றே கூறலாம்.

A1TamilNews.com

From around the web