அமெரிக்காவிலும் அமேசான் ப்ரைமில் பொன் மகள் வந்தாள்! கூடுதல் கட்டணம் உண்டா?

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள பொன்மகள் வந்தாள் படம் அமெரிக்காவிலும் அமேசான் ப்ரைமில் பார்க்க முடியும். ஜோதிகா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் ஆர்.பாண்டியராஜன் என ஐந்து முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குனர்களும் நடித்துள்ளார்கள். இந்தியாவில் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பார்க்க முடிவது போல் அமெரிக்காவில் உள்ள அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இலவசமாக காணலாம்.
 

அமெரிக்காவிலும் அமேசான் ப்ரைமில் பொன் மகள் வந்தாள்! கூடுதல் கட்டணம் உண்டா?மிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள பொன்மகள் வந்தாள் படம் அமெரிக்காவிலும் அமேசான் ப்ரைமில் பார்க்க முடியும்.

ஜோதிகா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் ஆர்.பாண்டியராஜன் என ஐந்து முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குனர்களும் நடித்துள்ளார்கள்.

இந்தியாவில் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பார்க்க முடிவது போல் அமெரிக்காவில் உள்ள அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இலவசமாக காணலாம்.

தியேட்டர்களில் வெளியாகி ஒரு மாத காலத்திற்குப் பிறகு, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளங்களில் தமிழ்ப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்காவில் தியேட்டர்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் இதனால் கணிசமாக குறைந்து வருகிறது.

வார இறுதியில் ஹோம் தியேட்டரிலேயே அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளங்களிலிருந்து திரைப்படங்கள் பார்க்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கே தியேட்டருக்குச் சென்று பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஓடிடி தளங்களில் நேரடியாக தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் பட்சத்தில், தமிழ் நாட்டின் திரையரங்கங்களும் பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் உருவாகும். அதே வேளையில் தியேட்டர் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் திரைப்படங்களுக்கு ஓடிடி தளம் புதிய வாய்ப்பாகவும் அமையும்.

A1TamilNews.com

From around the web