நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாக எழுதிய கடிதம் !

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று ஓராண்டு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் வெளியிட்டுள்ளார். அக்கடித்தத்தின் படி வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகள் செய்ய வேண்டும் என எண்ணி எனக்கு 2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் வாக்களித்திருக்கின்றனர். உலக அளவில் இந்தியாவை முன்மாதிரி நாடாக உருமாற்ற தினமும் செயல்பட்டு வருகிறேன். இந்த ஓராண்டு காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் பாதையை உருவாக்கி
 

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாக எழுதிய கடிதம் !மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று ஓராண்டு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.  இதைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் வெளியிட்டுள்ளார். அக்கடித்தத்தின் படி

வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகள் செய்ய வேண்டும் என எண்ணி எனக்கு 2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் வாக்களித்திருக்கின்றனர். உலக அளவில் இந்தியாவை முன்மாதிரி நாடாக உருமாற்ற தினமும் செயல்பட்டு வருகிறேன்.

இந்த ஓராண்டு காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் பாதையை உருவாக்கி வருகிறது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கே நாட்டின் மொத்தம் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம்.

கிராமப்புறங்களில் வசித்து வருபவர்களுக்கு குழாய்கள் மூலம் வீடுகளுக்கே நேரடியாகக் குடிநீர் கிடைக்க வழி வகை செய்யப்பட்டு வருகிறது.

வர்த்தகர்களை மேம்படுத்த வியாபாரி கல்யாண் வாரியத்தை உருவாக்கப்படும். வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த செயல்பாடுகளை கடிதத்தில் எழுத முடியாததாக அமைந்திருக்கிறது.

ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் தேசத்திற்காக உத்வேகத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுக்காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விளக்கு ஏற்றுதல், கை தட்டுதல் என அனைத்திலும் மக்கள் எங்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் தேச நலனுக்காக உழைப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். கொரோனா காரணமாக இழந்த் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் இந்தியா முன்மாதிரியான நாடாக உருவாகும் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

நமக்குத் தேவையான பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதும், இந்தியப் பொருட்களையே மக்களை வாங்கச் செய்வதுமான தற்சார்பு பொருளாதாரத்தை பின்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் தொடங்குவோர்களை ஊக்குவிக்க அரசாங்கம் தேவையான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே வருகிறது.

நாட்டிற்காக இரவு பகலாக பணியாற்றி வரும் என்னிடத்தில் அநேகக் குறைபாடுகள் இருந்தாலும் இந்தியாவைக் குறைபாடுகள் இல்லாத நாடாக உருவாக்கத் தொடர்ந்து செயலாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் என பிரதமர் மோடி உருக்கமாக கடிதத்தை எழுதியுள்ளார்.

A1TamilNews.com

From around the web