‘இளைஞர்களே தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்  தூதர்கள்!’ – பிரதமர் மோடி

சிகாகோவில் சூலை 4-7 நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வாழ்த்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த ஆங்கிலக் கடிதத்தின் தமிழ்மொழியாக்கம்: இந்தியா பல்வேறு மொழிகளைத் தன்னகத்தே கொண்ட சிறப்புக்குரியது. ஒவ்வொரு மொழியும் தனித்துவமும் பெருமையும் வாய்ந்தது. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் விசையாக இம்மொழிகளே திகழ்கின்றன. அவ்வகையில், வனப்புமிகு செம்மொழியாகத் திகழும் தமிழ்மொழி, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. தமிழிலுள்ள பாட்டும் உரைநடையும் தன்னேரிலாதவை. சங்க இலக்கியம் தொடங்கி உள்ளந்தொடும்
 

‘இளைஞர்களே தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்  தூதர்கள்!’ – பிரதமர் மோடிசிகாகோவில் சூலை 4-7 நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வாழ்த்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த ஆங்கிலக் கடிதத்தின் தமிழ்மொழியாக்கம்:

இந்தியா பல்வேறு மொழிகளைத் தன்னகத்தே கொண்ட சிறப்புக்குரியது. ஒவ்வொரு மொழியும் தனித்துவமும் பெருமையும் வாய்ந்தது. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் விசையாக இம்மொழிகளே திகழ்கின்றன.

அவ்வகையில், வனப்புமிகு செம்மொழியாகத் திகழும் தமிழ்மொழி, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. தமிழிலுள்ள பாட்டும் உரைநடையும் தன்னேரிலாதவை. சங்க இலக்கியம் தொடங்கி உள்ளந்தொடும் வள்ளுவரின் வாழ்வியல் தத்துவங்கள், பக்தி இலக்கியம், சுப்பிரமணிய பாரதியின் கனல் கக்கும் தேசவிடுதலைப் பாடல்கள் என்று ஆய்ந்து அறிந்துகொள்வதற்கேற்ற அரிய கருவூலங்கள்தாம் தமிழில் எத்தனை எத்தனை!

‘இளைஞர்களே தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்  தூதர்கள்!’ – பிரதமர் மோடி
 
ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதன் வாயிலாகவே அம்மொழி பேசும் சமூகத்தின்- நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டுக்கூறுகளை ஒருவர் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அதற்குத் தமிழ்மொழியே தக்க சான்றாகும்.

உலகத் தமிழ் மாநாட்டினை, அயலகத்தில் வாழும் இந்திய மக்களிடையே, நடத்துவதன் முக்கிய நோக்கம் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் பரப்புவதே ஆகும். தமிழின் தனித்தன்மையையும், வனப்பையும் அதற்குப் பின்புலமாகத் திகழும் வளமான இந்தியப் பண்பாட்டையும் உலக அரங்கில் பறை சாற்றுவதற்கு இம்மாநாடு நல்லதொரு வாய்ப்பாகும். 

இவ்வுலகத் தமிழ் மாநாடு புலம்பெயர்ந்த இந்திய மக்களிடையே, குறிப்பாகத் தமிழ் இளைஞர்களிடையே நல்ல ஊக்கத்தை ஏற்படுத்தித் தமிழின் புகழைப் பரப்பும் முயற்சிகளில் அவர்களை ஈடுபடவைக்கும் என்று நான் உளமார நம்புகின்றேன்.

இளைஞர்கள் ஒரு மொழியிலுள்ள சிறந்த படைப்புக்களை அறிந்துகொள்ளும்போது அவைபோன்ற புதிய படைப்புக்களைத் தாமும் உருவாக்கி அம்மொழியின் இலக்கியத்துக்கு வளஞ்சேர்க்க வேண்டும் எனும் ஆர்வம் அவர்களுக்குள் ஏற்படும். 

‘இளைஞர்களே தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்  தூதர்கள்!’ – பிரதமர் மோடி

இளைஞர்களே! (உம்) மொழியை நன்கு பயின்று அதில் புலமையை மேம்படுத்திக் கொள்வதோடு புதிய படைப்புக்களையும் உருவாக்கி மொழியைச் செழுமைப்படுத்தும் பணியில் விரைந்து ஈடுபடுங்கள் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் இன்றைய இளைஞர்களே தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தனித்துவம் வாய்ந்த தூதர்கள்!

இந்த உலகத் தமிழ் மாநாடு பெருவெற்றி பெறட்டும்! தமிழ்மொழி புதிய உச்சங்களைத் தொட அது உதவட்டும்!

வணக்கம்!

– மேகலா இராமமூர்த்தி

From around the web