மனிதநேயத்தைக் காப்போம்.. உலகநாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு எதிராகவும் மனிதநேயத்தைக் காப்பதற்காகவும் உலக நாடுகள் ஒன்று சேரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். “தீவிரவாதம் என்பது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. உலகின் அனைத்து நாடுகளுக்குமான பிரச்சனை. மனிதநேயத்திற்கு எதிரான பிரச்சனை. திவீரவாதத்திற்கு எதிராக உலகநாடுகளின் அதிகபட்சமான கோபம் வெளிப்பட வேண்டும். நாங்கள் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வருகிறோம். யுத்தம் செய்யும் நாடு அல்ல. தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் குரல்
 

மனிதநேயத்தைக் காப்போம்.. உலகநாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு எதிராகவும் மனிதநேயத்தைக் காப்பதற்காகவும் உலக நாடுகள் ஒன்று சேரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

“தீவிரவாதம் என்பது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. உலகின் அனைத்து நாடுகளுக்குமான பிரச்சனை. மனிதநேயத்திற்கு எதிரான பிரச்சனை. திவீரவாதத்திற்கு எதிராக உலகநாடுகளின் அதிகபட்சமான கோபம் வெளிப்பட வேண்டும்.

நாங்கள் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வருகிறோம். யுத்தம் செய்யும் நாடு அல்ல. தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பும் போது, அது மிகவும் கோபத்துடன் மட்டுமல்ல, அதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஐக்கிய நாடுகளுக்கிடையே தீவிரவாதம் குறித்த ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பது, ஐநா சபை உருவாக்கப்பட்டதன் அடிப்படை தத்துவங்களிலேயே குறைபாடு ஆகிவிடுகிறது,” என்று பிரதமர் மோடி ஐநா உரையின் போது பேசினார்.

இந்தியாவின் வளர்ச்சி பற்றியும், சுகாதாரம், வங்கி சேவைகள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவிடமிருந்து இத்தகைய முன்னேற்றங்களை உலகநாடுகள் கற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

மனிதநேயத்தைக் காப்போம்.. உலகநாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர், அமைதியையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதையே வலியுறுத்துகிறது. அமைதியும் நல்லிணக்கமும் தான் இந்தியா உலகுக்குச் சொல்லும் செய்தியாகும் என்று வலியுறுத்தினார் பிரதமர் மோடி.

மூன்றாவது தடவையாக ஐநாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, 20 நிமிடங்கள் இந்தியில் பேசினார். பாகிஸ்தான் பற்றி நேரடியாக குறிப்பிடாமல் தீவிரவாதம் பற்றி விரிவாகப் பேசி பலத்த கைத்தட்டல்களைப் பெற்றார்.

– வணக்கம் இந்தியா

From around the web