அடுத்த 3 மாதங்களுக்கு பி.எப் தொகையை அரசே செலுத்தும்! நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு!

ரூ.200 கோடி ரூபாய் வரையிலான அரசு துறைகளின் கொள்முதலுக்கு இனி இந்தியாவிற்குள்ளேயே ஒப்பந்தபுள்ளி கோரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், இனி வரும் அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர் பங்கு தொகையில் ஒரு பகுதியை அரசே செலுத்தும் என்றும் தெரிவித்தார். முன்னதாக ஏற்கெனவே 3 மாதங்களுக்கான பி.எஃப் தொகையை அரசு செலுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளையும் 45 நாட்களுக்குள்
 

அடுத்த 3 மாதங்களுக்கு பி.எப் தொகையை அரசே செலுத்தும்!  நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு!ரூ.200 கோடி ரூபாய் வரையிலான அரசு துறைகளின் கொள்முதலுக்கு இனி இந்தியாவிற்குள்ளேயே ஒப்பந்தபுள்ளி கோரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும், தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், இனி வரும் அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர் பங்கு தொகையில் ஒரு பகுதியை அரசே செலுத்தும் என்றும் தெரிவித்தார். முன்னதாக ஏற்கெனவே 3 மாதங்களுக்கான பி.எஃப் தொகையை அரசு செலுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளையும் 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும், சிறு, குறு, நடுத்தர வர்த்தக உற்பத்தி பொருட்களை  அடுத்த 45 நாட்களுக்குள் இ – மார்க்கெட் மூலமாக விற்பனைச் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

A1TamilNews.com

 
 

From around the web