வீட்டிலிருந்தபடியே பி.எஃப்.லிருந்து பணம் பெற முடியும்! நிர்மலா சீதாராமன் தகவல்!

கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது. ஊரடங்கால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நாட்களில் தேவைப்படும் அவசர நிதிக்காக வீட்டிலிருந்த படியே வருங்கால சேமிப்பு தொகையிலிருந்து 75 சதவீத பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 75 சதவிகிதம் அல்லது மூன்று மாத ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப்
 

வீட்டிலிருந்தபடியே பி.எஃப்.லிருந்து பணம் பெற முடியும்! நிர்மலா சீதாராமன் தகவல்!கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது. ஊரடங்கால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நாட்களில் தேவைப்படும் அவசர நிதிக்காக வீட்டிலிருந்த படியே வருங்கால சேமிப்பு தொகையிலிருந்து 75 சதவீத பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

75 சதவிகிதம் அல்லது மூன்று மாத ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தொகையை திருப்ப செலுத்த தேவையில்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட  EPFO இணையதளத்தில் UANஎண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். PASSWORD கொடுத்து இருப்பு கணக்கிற்குள் செல்ல வேண்டும்.

பின்னர் ONLINE SERVICES மற்றும் CLAIM என்ற பிரிவிற்குச் சென்று அதில் Outbreak of pandemic என்பதை தேர்வு செய்தால், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

OTP பதிவு செய்த உடன், கேட்ட தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த சேவையை நாம் வீட்டில் இருந்த படியே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web