ஊழல் குற்றச்சாட்டு… பதவி நீக்கம் செய்யும்முன்பே விலகிய ‘மானஸ்தன்’ பெரு நாட்டின் அதிபர்!

லிமா(பெரு): தென் அமெரிக்காவின் முக்கிய நாடுகளில் ஒன்றான பெரு நாட்டு அதிபர் பெட்ரோ பாப்லோ குக்ஸின்ஸ்கி பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது தென் அமெரிக்காவின் மிகப்பெரும் கட்டுமான நிறுவனத்துடன் இணைத்து ஊழல் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதையடுத்து, பாராளுமன்றத்தில் அதிபரை தகுதி நீக்கம் செய்து பதவியை விட்டு இறக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாக குக்ஸின்ஸ்கி தானாக முன்வந்து அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ‘நடந்த விவகாரங்களில் எனக்கு தொடர்பு இல்லை
 

ஊழல் குற்றச்சாட்டு…  பதவி நீக்கம் செய்யும்முன்பே விலகிய  ‘மானஸ்தன்’ பெரு நாட்டின் அதிபர்!

லிமா(பெரு): தென் அமெரிக்காவின் முக்கிய நாடுகளில் ஒன்றான பெரு நாட்டு அதிபர் பெட்ரோ பாப்லோ குக்ஸின்ஸ்கி பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது தென் அமெரிக்காவின் மிகப்பெரும் கட்டுமான நிறுவனத்துடன் இணைத்து ஊழல் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதையடுத்து, பாராளுமன்றத்தில் அதிபரை தகுதி நீக்கம் செய்து பதவியை விட்டு இறக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாக குக்ஸின்ஸ்கி தானாக முன்வந்து அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

‘நடந்த விவகாரங்களில் எனக்கு தொடர்பு இல்லை என்றாலும், நாட்டின் இறையாண்மையும் ஒற்றுமையும் கருதி அதிபர் பதவியிலிருந்து விலகுகிறேன். என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் நான் தடையாக இருக்க விரும்பவில்லை’ என்று குக்ஸின்ஸ்கி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு தான் பலியாகி உள்ளதாகவும் 79 வயது நிரம்பி இந்த முன்னாள் அதிபர் கூறியுள்ளார். முன்னதாக, பாராளுமன்ற தீர்மானத்தில் எதிராக வாக்களிக்க வேண்டாம் என உறுப்பினர்களுக்கு குக்ஸின்ஸ்கியின் ஆதரவாளர் கென்ஜி ஃபுஜிமொரி பணம் கொடுத்தது வீடியோ மூலம் அம்பலமாகியது. அதைத் தொடர்ந்து தான் இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டு…  பதவி நீக்கம் செய்யும்முன்பே விலகிய  ‘மானஸ்தன்’ பெரு நாட்டின் அதிபர்!

குக்ஸின்ஸ்கி – க்கு முன்னதாக பதவில் இருந்த அதிபர் ஒலாண்டா ஹுமாலாவும் அவரது மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிறையில் உள்ளனர். உதெப்ரெஷ் என்ற் ப்ரேசில் நாட்டைச் சார்ந்த கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றார் என்ற அவர் மீதான வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இதே நிறுவனத்துடனான ஊழல் குற்றச்சாட்டிற்காக ஈக்குவடார் நாட்டு துணை அதிபர் ஹோர்ஹே க்ளாஸ் 6 வருட சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். ப்ரேசில் நாட்டு முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா தா சில்வா மீதும் இந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதற்கான வழக்கு நடந்து வருகிறது.அனேகமாக அவருக்கும் சிறைக்கம்பிகள் காத்திருப்பதாகத் தெரிகிறது.

உதெப்ரெஷ் கட்டுமான நிறுவனத்தினர் தென் அமெரிக்க அரசியல்வாதிகளை ஒட்டு மொத்தமாக பணத்தைக் கொடுத்து, மொத்தமாக வளைத்து விட்டார்கள் போலும்

 

From around the web