பெற்றோர்களே உஷார்! உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் தினமும் படிக்கின்றார்களா?

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து இருக்கும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் தினமும் 4 மணி அல்லது 5 மணி நேரம் ஆன்லைன் பாடம் நடத்த துவங்கி விட்டனர். இதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக பலமணி நேரம் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்களை உபயோகப்படுத்தி வருகின்றனர். ஆனால் பல மணி நேரம் டிஜிட்டல் திரைகளை பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு உருவாகலாம் என கண் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மாற்று எதுவும்
 

பெற்றோர்களே உஷார்! உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் தினமும் படிக்கின்றார்களா?லகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து இருக்கும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில் தினமும் 4 மணி அல்லது 5 மணி நேரம் ஆன்லைன் பாடம் நடத்த துவங்கி விட்டனர். இதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக பலமணி நேரம் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்களை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் பல மணி நேரம் டிஜிட்டல் திரைகளை பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு உருவாகலாம் என கண் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மாற்று எதுவும் இல்லை எனினும் பாதிப்பை குறைத்துக் கொள்ள சில வழிமுறைகளையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை ஒவ்வொரு வகுப்பு 45 நிமிடங்கள் முடிந்த உடன் 20 அடி தூரத்திலுள்ள இடத்தை, 20 நொடிகள் பார்க்கச்செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வீட்டிற்குள்ளேயே ஐந்து நிமிடங்கள் நடக்கவும், அடிக்கடி கண்களை குளிர்ந்த நீரால் கழுவவும் பழக்கப்படுத்தவும் வேண்டும்.

அத்துடன் ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் வேலைகள் முடிந்தவுடன் கண்களை மூடி ரிலாக்சாக ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கண்களை மூடி அமரச்செய்ய வேண்டும்.

A1TamilNews.com

From around the web