முக ஸ்டாலின் போராட்டம் பற்றி பாகிஸ்தான் ரேடியோ வெளியிட்டுள்ள செய்தி!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதை, பாகிஸ்தான் ரேடியோ செய்தியாக வெளியிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கும், இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தததற்கும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்ப்பு தெரிவித்தது. பாராளுமன்றத்தின் இரு அவையிலும் திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இந்நிலையில் டெல்லியில் அனைத்துக் கட்சிகள் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். “காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை
 

முக ஸ்டாலின் போராட்டம் பற்றி பாகிஸ்தான் ரேடியோ வெளியிட்டுள்ள செய்தி!
சென்னை:
 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதை, பாகிஸ்தான் ரேடியோ செய்தியாக வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கும், இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தததற்கும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்ப்பு தெரிவித்தது. பாராளுமன்றத்தின் இரு அவையிலும் திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் அனைத்துக் கட்சிகள் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தப் பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் 14 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளார்கள். பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பறித்துள்ளது மத்திய பாஜக அரசு.

ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம் பிடுங்கிக் கொள்ள மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீர வேண்டியது ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது

கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்துத் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற 22.8.2019 அன்று காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் குறித்து பாகிஸ்தான் ரேடியோ செய்தி வெளியிட்டுள்ளது. ட்விட்டர் மூலமும் “இந்திய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான திமுக, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிரதமர் மோடி யின் அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்துவதாக,” செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பேசுவது போன்ற படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்கள.

– வணக்கம் இந்தியா

 
 

 

 

From around the web