நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது – ப.சிதம்பரம்!

திகார் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பி வருகிறார்கள். தன்னுடைய வழக்கு பற்றி மட்டும் கருத்து சொல்ல மாட்டேன், நீதிமன்றம் அவ்வாறு அறிவுறுத்தியுள்ளது என்று கூறியவர் மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொறுப்பற்றத் தன்மையும், செயல் திறன் இல்லாமையும் தான் காரணம் என்று கூறியுள்ளார். அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்று
 

நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது – ப.சிதம்பரம்!திகார் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பி வருகிறார்கள். தன்னுடைய வழக்கு பற்றி மட்டும் கருத்து சொல்ல மாட்டேன், நீதிமன்றம் அவ்வாறு அறிவுறுத்தியுள்ளது என்று கூறியவர் மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பொறுப்பற்றத் தன்மையும், செயல் திறன் இல்லாமையும் தான் காரணம் என்று கூறியுள்ளார். அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறிய அவர், அரசின் வசம் உள்ள சொத்துக்களை(நிறுவனங்களை) விற்பது தான் வருவாய் இழப்பை நிரப்ப ஒரே வழி என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரு பத்திரிக்கையில் ஒரே நாளில் ஐந்து பாலியல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். மிகவும் வெட்கக்கேடாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

நம் நாட்டில் உயர்கல்வி இலவசமாக இருக்க வேண்டும். அந்த நிலையை எட்டாத போது, கட்டணம் குறைவாக இருக்க வேண்டும். கட்டண அதிகரிப்பால் படிப்பை நிறுத்தி விட்டதாக ஜேஎன்யூ மாணவர் கூறியுள்ளார். நானும் எங்கள் கட்சியும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக உள்ளோம்., கல்விக்கட்டண உயர்வை கண்டிக்கிறோம் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சிறைவாசம் குறித்து கேட்ட போது, மரப்பலகையில் தலையணை இல்லாமல் படுக்கும் போதும் கழுத்தும், முதுகெலும்பும் வலுவடைகிறது. என்னுடைய முதுகெலும்பும் கழுத்தும் வலுப்பெற்றுள்ளது. தலையும் வலுவாக உள்ளது என்று கூறினார். அரசின் நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டேன் என்பதை சூசகமாக இவ்வாறு கூறியுள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்த உடனேயே நாட்டில் உள்ள அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரக்க குரல் எழுப்புவார் என்று கூறப்படுகிறது.

https://www.A1TamilNews.com

From around the web