ஜாமீன் மறுப்பு : ப.சிதம்பரம் என்ன பில்லாவா? அல்லது ரங்காவா? – கபில் சிபல் காட்டம்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று 100 வது நாளாக சிறைவாசத்தை தொடர்கிறார். பல தடவைகள் ஜாமீன்கள் கோரப்பட்ட நிலையில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் சார்பில் வாதாடிய கபில் சிபல் காட்டமான கேள்விகளை முன் வைத்தார். “வெளிநாட்டுக்கு விமானத்தில் தப்பிச் செல்வது, சாட்சிகளை மிரட்டுவது, ஆதாரங்களை அழிப்பது போன்ற மூன்று விதிகளும் ப.சிதம்பரத்திற்கு பொருந்தாது என்று
 

ஜாமீன் மறுப்பு : ப.சிதம்பரம் என்ன பில்லாவா? அல்லது ரங்காவா? – கபில் சிபல் காட்டம்!என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று 100 வது நாளாக சிறைவாசத்தை தொடர்கிறார். பல தடவைகள் ஜாமீன்கள் கோரப்பட்ட நிலையில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் சார்பில் வாதாடிய கபில் சிபல் காட்டமான கேள்விகளை முன் வைத்தார்.

“வெளிநாட்டுக்கு விமானத்தில் தப்பிச் செல்வது, சாட்சிகளை மிரட்டுவது, ஆதாரங்களை அழிப்பது போன்ற மூன்று விதிகளும் ப.சிதம்பரத்திற்கு பொருந்தாது என்று உயர் நீதிமன்றத்திலேயே நிருபிக்கப்பட்டுவிட்டது. கடந்த 41 நாட்களாக அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளப் படவில்லை. கடைசியாக அவரிடம் 2018ம் ஆண்டு அறிக்கை பெறப்பட்டது. ஆனால் ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிறையிலேயே வைக்க விரும்புகிறார்கள். ஏன்? காரணம் தெரியவில்லை.

இது ஒரு பெரிய சிதம்பர ரகசியமாக இருக்கிறது. 1978ம் ஆண்டு சோப்ராவின் குழந்தைகளை கடத்தி கொலை செய்த பில்லா, ரங்கா என்ற இரண்டு கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ப.சிதம்பரம் பில்லாவோ ரங்காவோ இல்லை. ஆனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. அவரை வெளியே விட்டால், மக்களுக்கு தவறான செய்தி போகும் என்று கூறுகிறார்கள். அவர் என்ன பில்லா, ரங்காவைப் போல் ஆபத்தானவரா?,” என்று கபில் சிபல் வாதாடினார்.

இந்த பில்லா, ரங்கா மேற்கோளைக் கேட்டதும் நீதிபதி பானுமதி உள்ளிட்டவர்கள் சிரித்து விட்டனர். நீதிமன்றமே சிரிப்பலையில் மூழ்கியது. தொடர்ந்து ப.சிதம்பரம் சார்பில் அபிஷேக் மனு சிங்வி வாதாடினார். ”99 நாட்கள் ஆகிவிட்டது. எஃப்ஐஆர், இசிஐஆர் அல்லது வேறு எந்த ஆவணங்களிலும் சிதம்பரம் பணம் பெற்றுக் கொண்டதாகவோ, கம்பெனி தொடங்கியதாகவோ இல்லை. ” என்று கூறினார்.

முன்னதாக திகார் ஜெயிலில் ராகுல் காந்தியும், பிரியங்காகாந்தியும் ப.சிதம்பரத்தை சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர்.

https://www.A1TamilNews.com

From around the web