அதிபர் ட்ரம்ப்-ஐ பதவி நீக்கம் செய்ய அமெரிக்கர்கள் அமோக ஆதரவு!

வாஷிங்டன்: அதிபர் ட்ரம்ப்-ஐ பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று 51 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் உக்ரேன் நாட்டுக்கு அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கியிருந்ததை, தனது சொந்த அரசியல் லாபத்திற்காக அந்நாட்டு தலைவர்களை கட்டாயப்படுத்தி ஜோ பைடனுக்கு எதிரான தகவல்கள் பெற முயன்றார்
 

வாஷிங்டன்: அதிபர் ட்ரம்ப்-ஐ பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று 51 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் உக்ரேன் நாட்டுக்கு அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கியிருந்ததை, தனது சொந்த அரசியல் லாபத்திற்காக அந்நாட்டு தலைவர்களை கட்டாயப்படுத்தி ஜோ பைடனுக்கு எதிரான தகவல்கள் பெற முயன்றார் என்று அதிபர் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளைத் தெரிந்த ஒருவர், அவைத்தலைவர் நான்சி பெலோசி கவனத்திற்கு கொண்டு வரவே, ட்ரம்ப்-ஐ பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

இது குறித்து பல விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.  ஃபாக்ஸ் செய்தி தொலைக்காட்சி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் 51 சதவீத அமெரிக்கர்கள் ட்ரம்ப்-ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.  குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் சம பலத்தில் இருக்கும் மாநிலங்களில் இந்த ஆதரவு 52 சதவீதமாகவும் உள்ளது.

40 சதவீத மக்கள் ட்ரம்ப் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்று ட்ரம்ப்புக்கு ஆதரவாகவும் உள்ளார்கள். அதே வேளையில் இந்த ஒழுங்கு நடவடிக்கையை விசாரிக்கும் உறுப்பினர்கள் அவைத்தலைவர் நான்சி பெலோசி, புலனாய்வு கமிட்டி தலைவர் ஆடம் ஷிஃப், செனட் மெஜாரிட்டி தலைவர் மிச் மெக்கனல் (குடியரசுக் கட்சி)  ஆகியோர் மீது பொது மக்களிடம் ஆதரவு இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப் பட்டால், பதவி நீக்க நடவடிக்கைகளிலிருந்து தப்ப முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

From around the web