நம்ப முடிகிறதா? ஒரு கிலோ வெங்காயம் வெறும் 35 ரூபாய்!

பீகாரில் வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். பாட்னாவின் பல பகுதிகளில் பீகார் மாநில கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கத்தின் சார்பில் மானிய விலையில் வெங்காயம் விற்கப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பீகாரின் இல்லத்தரசிகள், கூட்டுறவு சந்தைக்கு படையெடுத்துள்ளனர். மலிவு விலையில் விற்கப்படும் வெங்காயத்தை வாங்குவதற்காக அதிகாலை முதலே 400க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். டோக்கன் முறையில் வரிசைப்படுத்தி, கூட்டுறவு சந்தை
 

நம்ப முடிகிறதா? ஒரு கிலோ வெங்காயம் வெறும் 35 ரூபாய்!பீகாரில் வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். பாட்னாவின் பல பகுதிகளில் பீகார் மாநில கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கத்தின் சார்பில் மானிய விலையில் வெங்காயம் விற்கப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பீகாரின் இல்லத்தரசிகள், கூட்டுறவு சந்தைக்கு படையெடுத்துள்ளனர். மலிவு விலையில் விற்கப்படும் வெங்காயத்தை வாங்குவதற்காக அதிகாலை முதலே 400க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

டோக்கன் முறையில் வரிசைப்படுத்தி, கூட்டுறவு சந்தை ஊழியர்கள் வெங்காயத்தை விற்பனை செய்கின்றனர். நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறி வரும் நிலையில் பீகாரில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவது அம்மாநிலப் பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அ

தேவேளையில் வெங்காயத் தட்டுப்பாடு காரணமாக கல்வீச்சு சம்பவங்களும் நடக்கும் என்பதால் அச்சமடைந்துள்ள விற்பனையாளர்கள் தலைக்கவசம் அணிந்துகொண்டு பணியாற்றுகின்றனர்.

https://www.A1TamilNews.com

From around the web