ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைப்பு!

கொரானோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தமது நாடுகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோவில் ஜூலையில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருந்தது. ஆனால் கொரானோ பீதியால் கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள். வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. கனடா அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில்
 

ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைப்பு!கொரானோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தமது நாடுகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோவில் ஜூலையில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருந்தது.  ஆனால் கொரானோ பீதியால் கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள்.

வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள்  கோரிக்கை விடுத்திருந்தன.

கனடா அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியும் தமது விலகலை உறுதி செய்தது. நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த நெருக்கடிகளால் தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து  ஆலோசனைகள் நடந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டும், வீரர், வீராங்கனைகளின் உடல்நலனை காக்கும் வகையிலும் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜப்பான் பிரதமர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

இறுதியில் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டி 2021 ஒலிம்பிக் போட்டியாக நடைபெற உள்ளது.

http://www.A1TamilNews.com

 
 

From around the web