1400 ஊழியர்களுக்கு கல்தா!! ஓலா நிறுவனம் அதிரடி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. பெரும் நகரங்களில் மட்டுமல்ல உலக அளவில் பொது மக்களின் வாகனப் போக்குவரத்தில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று ஓலா நிறுவனம். கொரோனா ஊரடங்கு காரணமாக ஓலா நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தினை சந்தித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நஷ்டத்தினை ஈடுகட்டும் வகையில் முதற்கட்டமாக இந்த வார இறுதிக்குள் 1400 பணியாளர்களை பணிநீக்கம்
 

1400 ஊழியர்களுக்கு கல்தா!! ஓலா நிறுவனம் அதிரடி!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.

பெரும் நகரங்களில் மட்டுமல்ல உலக அளவில் பொது மக்களின் வாகனப் போக்குவரத்தில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று ஓலா நிறுவனம். கொரோனா ஊரடங்கு காரணமாக ஓலா நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தினை சந்தித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நஷ்டத்தினை ஈடுகட்டும் வகையில் முதற்கட்டமாக இந்த வார இறுதிக்குள் 1400 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்தியாவில் பெங்களூருவில் இயங்கி வந்த ஓலா வாகன பணியாளர்கள் பணிநீக்கம் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு ஊரடங்கு காலத்திற்கான 3 மாத சம்பளம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் எனவும், அவர்களுக்குரிய மருத்துவக் காப்பீட்டுத் தொகை, விபத்துக் காப்பீட்டுத் தொகை மற்றும் பணியாளர்களின் பெற்றோருக்கான காப்பீட்டுத் தொகை இவற்றை டிசம்பர் 31ம் தேதி வரை தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web