முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்ட திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது!

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அவருடைய மனைவி மிஷல் ஒபாமாவும் வெளியிட்ட அமெரிக்கன் ஃபேக்டரி டாக்குமெண்டரி படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. ஒஹாயோ மாநிலத்தில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கைவிட்ட தொழிற்சாலையை ஒரு சீன பில்லியனர் வாங்கி அங்கே சீனர்களை உயர்தொழில்நுட்ப பதவிகளில் அமர்த்துகிறார். சீனர்களுக்கும் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டது. ஒபாமா, மிஷல் ஒபாமாவின் நிறுவனமான ஹை க்ரவுண்ட் இந்தப் படத்தை வெளியிட்டது. நெட்ஃப்ளிக்ஸ்-ல் வெளியிடப்பட்ட
 

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்ட திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது!முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும்  அவருடைய மனைவி மிஷல் ஒபாமாவும் வெளியிட்ட அமெரிக்கன் ஃபேக்டரி டாக்குமெண்டரி படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

ஒஹாயோ மாநிலத்தில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கைவிட்ட தொழிற்சாலையை ஒரு சீன பில்லியனர் வாங்கி அங்கே சீனர்களை உயர்தொழில்நுட்ப பதவிகளில் அமர்த்துகிறார். சீனர்களுக்கும் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டது.

ஒபாமா, மிஷல் ஒபாமாவின் நிறுவனமான ஹை க்ரவுண்ட் இந்தப் படத்தை வெளியிட்டது. நெட்ஃப்ளிக்ஸ்-ல் வெளியிடப்பட்ட இந்தப் படத்தை ஸ்டீவன் போக்னர் மற்றும் ஜூலியா ரெய்செர்ட் இயக்கி இருந்தார்கள்.

இயக்குனர்களை வாழ்த்தி ஒபாமா ட்வீட் செய்துள்ளார். பொருளாதார மாற்றத்தின் விளைவுகளினால் ஏற்படும் மனித மாற்றங்களை அருமையாக படமாக்கிய அமெரிக்க ஃபேக்டரி இயக்குனர்களுக்கு வாழ்த்துகள். இரண்டு திறமையான இயக்குனர்கள் ஹை க்ரவுண்ட் நிறுவனத்தின் முதல் வெளியீட்டுப் படத்திற்காக, இந்த விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவருடைய நிறுவனம் வெளியிட்ட படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது ஹாலிவுட் மட்டுமல்லாமல் அமெரிக்க அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

https://www.A1TamilNews.com 

From around the web