இனி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்! வியாபாரிகள் சங்கம் முக்கிய அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் கடந்த சில தினங்களாக திருச்சியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக திருச்சியில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். திருச்சியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3755 பேர். கடை வீதிகள், மார்க்கெட்டுகளில் தனிமனித இடைவெளியைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெல்லம், சர்க்கரை
 

இனி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்! வியாபாரிகள் சங்கம் முக்கிய அறிவிப்பு!மிழகம் முழுவதும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் கடந்த சில தினங்களாக திருச்சியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தடுப்பு நடவடிக்கையாக திருச்சியில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். திருச்சியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3755 பேர்.

கடை வீதிகள், மார்க்கெட்டுகளில் தனிமனித இடைவெளியைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் சங்கத்தினர் தாமாக முன்வந்து தங்களது வழக்கமான வியாபார நேரத்தைக் குறைத்து அறிவித்துள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கிலும், கடை ஊழியர்கள், பொதுமக்களின் நலன் கருதியும் ஜூலை 29ம் தேதி முதல் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகளை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web