அடுத்த ரெண்டு வாரமும் அமெரிக்காவுக்கு கஷ்டமான நேரம் – அதிபர் ட்ரம்ப்!

அடுத்த இரு வாரங்கள் அமெரிக்காவுக்கு கடினமான நாட்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான தினசரி செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அதிபர் ட்ரம்ப் இவ்வாறு கூறினார். மேலும், அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் அமெரிக்காவில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு 22 லட்சத்தை விடவும் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் உயிரிழப்புகளை ஒரு லட்சத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என்று தொற்று நோய் நிபுணர்
 

அடுத்த ரெண்டு வாரமும் அமெரிக்காவுக்கு கஷ்டமான நேரம் – அதிபர் ட்ரம்ப்!டுத்த இரு வாரங்கள் அமெரிக்காவுக்கு கடினமான நாட்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான தினசரி செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அதிபர் ட்ரம்ப் இவ்வாறு கூறினார். மேலும், அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் அமெரிக்காவில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு 22 லட்சத்தை விடவும் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் உயிரிழப்புகளை ஒரு லட்சத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என்று தொற்று நோய் நிபுணர் டாக்டர். அண்டனி ஃபௌச்சி தெரிவித்தார். நியூயார்க் நகரத்தில் ஏற்பட்டது போல் மற்ற பெரிய நகரங்களிலும் நடந்தால் இரண்டு லட்சமாக இந்த உயிரிழப்பு இருக்கும் என்று டாக்டர். டெபரா பர்க்ஸ் கூறினார்.

வாஷிங்டன் மாநிலத்தில் முதல் வாரத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து விட்டதால், அங்கே பாதிப்பு குறைவாக உள்ளது. கலிஃபோர்னியாவில் இரண்டாவது வாரத்திலேயே வீட்டுக்குள் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அங்கும் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. இதே போல் மற்ற மாநிலங்கள், மாநகரங்களிலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்று டாக்டர் டெபரா பர்க்ஸ் தெரிவித்தார்.

டல்லாஸ், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெரு நகரங்களில் கொரோனோ தொற்று எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்த எண்ணிக்கையில் மாற்றம் வரலாம். தற்போதைய தகவல்கள் படி 1 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று டாக்டர் டெபரா பர்க்ஸ் மற்றும் டாக்டர். அண்டனி ஃபௌச்சி கூறினார்கள்.

அரசு நடவடிக்கைகள் இல்லையென்றால், விமான நிலையம், ரெஸ்டாரண்ட் என எல்லா இடங்களிலும் மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும். 22 லட்சம் பேருக்கும் மேலானவர்களை இழந்திருப்போம் என்று கூறிய ட்ரம்ப், அடுத்த இரு வாரங்கள் அமெரிக்கர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

செவ்வாய்கிழமை மட்டும் அமெரிக்காவில் 811 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.  நாட்டில் உள்ள 80 சதவீத மக்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு உரிய மாஸ்க்குள் உள்ளிட்ட அத்தியாவசியத் பொருட்கள் கிடைக்கவில்லை என்று பரவலான குற்றச்சாடுகள் எழுந்துள்ளது. மருத்துவப் பணியில் இருப்பவர்களை காப்பதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று மருத்துவர்கள், நர்ஸுகள் உள்ளிட்ட பலரும் சமூகத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பரவி வரும் வேளையில், இங்கே இருந்து அமெரிக்காவில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களிடம் அழைத்து நலம் விசாரித்து வருகிறார்கள். அமெரிக்கத் தமிழர்களும், அங்கே அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் படி நடந்து கொரோனா சமூகப் பரவலை தடுக்க உதவிட வேண்டியது கடமையாகும்.

A1TamilNews.com

 

From around the web